இது ரொம்ப முக்கியமா? குஷ்பு முன்னால் ராதிகாவை கலாய்த்த சுந்தர் சி.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகள் ப்ரீத்தா திருமணம் குறித்த தகவல்களும் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் குறித்த தகவல்களும்தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி, உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் தொடங்கி பல நட்சத்திரங்கள் வரை பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள். இந்நிலையில் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை ராதிகாவை, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி தனது மனைவி குஷ்பு முன்னிலையில் கலாய்த்து தள்ளியுள்ளார்.

வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் தனது மகள் ப்ரீத்தாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடத்தி முடித்துள்ளார். அவர் தனது மகள் திருமணத்திற்கு மட்டும் சுமார் சுமார் 50 கோடிகளுக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது. மேலும் அவர் தனது மகளுக்கு ஏற்பாடு செய்துள்ள திருமண ஏற்பாடுகளை பார்த்த பலரும் இது நடிகர் நெப்போலியன் தனது மகனுக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை விடவும் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Director Sundar C Trolls Actress Radhika Infront of Kushboo at Ishari K Ganesh daughter wedding

திரைப் பட்டாளம்: ஐசரி கணேசன் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, நடிகர் பிரபு, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது தோழி கெனிஷா, நடிகை ராதிகா, நடிகர் கருணாஸ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இயக்குநர் வெற்றிமாறன், நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் தேசாய், நடிகை அதிதி ஷங்கர், நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது மனைவி சரண்யா பொன்வண்ணன், நடிகர்கள் அருண் பாண்டியன், பிரபுதேவா, பிரசாந்த், சத்யராஜ், நிழல்கள் ரவி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் சிம்ரன், சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

Take a Poll

ராதிகா - குஷ்பு: சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் நடைபெற்ற திருமண சங்கீத் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்து கொண்ட நடிகர் சூர்யா மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துச் சென்றார். இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த ராதிகாவை பார்த்த இயக்குநர் சுந்தர் சி தனது மனைவியும் நடிகையுமான குஷ்பு முன்னால் கலாய்த்துள்ளார்.

Director Sundar C Trolls Actress Radhika Infront of Kushboo at Ishari K Ganesh daughter wedding

கலாய்: அதாவது திருமணத்தில் கலந்து கொள்ள வந்த ராதிகாவை நடிகர் விச்சு விஸ்வநாதன் கட்டிப்பிடித்து வரவேற்றார். அதன் பின்னர் அவரும் நடிகை ராதிகாவும் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த இயக்குநர் சுந்தர் சி, நடிகை ராதிகாவும் நடிகர் விச்சு விஸ்வநாதன் உடன் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து, இப்போது இதெல்லாம் அவசியமா என்று நக்கலுடன் கேட்டார். அப்போது அங்கு வந்த நடிகை குஷ்பு ராதிகாவிடம் நலம் விசாரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் குஷ்பு முன்னால் ராதிகாவை கலாய்த்துவிட்டாரே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X