Aranmanai 4: மனித சக்தியால கட்டுப்படுத்த முடியாது.. வெளியானது அரண்மனை 4 ட்ரெயிலர்!
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முக திறமையுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர் சி. பிரபல நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது அரண்மனை. மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற இந்த படம் ஹாரர் திரில்லராக காமெடி ஜானரில் வெளியானது. படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் 2016 மற்றும் 2021 என வெளியானது. 2016ம் ஆண்டில் வெளியான அரண்மனை 2 படத்தில் சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து 2021ம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராசி கண்ணா, சாக்ஷி அகர்வாலுடன் சுந்தர் சியும் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தார். ஹாரருடன் காமெடியையும் இணைத்து இந்த படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் நான்காவது பாகம் உருவாகியுள்ளது. படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தில் சுந்தர் சி லீட் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அரண்மனை படம்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருபவர் சுந்தர் சி. இவரது நடிப்பில் அதிகமான படங்கள் வெளியான போதிலும் இவரது அரண்மனை படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதுமே வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது அரண்மனை படம். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் ரசிகர்களிடையே பெற்றது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
ரிலீசுக்கு தயாரான அரண்மனை 4: இதையடுத்து 2021ம் ஆண்டில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டவர்களுடன் சுந்தர் சியும் நடித்திருந்தார். காமெடி ஜானர்களில் இந்த படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக அரண்மனை 4 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தையும் சுந்தர் சியே இயக்கியுள்ள நிலையில் படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அரண்மனை 4 ட்ரெயிலர்: படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அதிரடியான ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. சுந்தர் சியின் தங்கையான தமன்னாவின் மரணம் மற்றும் அவரது மரணத்திற்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர் சி என இந்த ட்ரெய்லரில் காணப்படுகிறது.
வழக்கமான படமா அரண்மனை 4?: பேய்க்கு பாக் என்று பெயரிடப்பட்டுள்ளதாக ட்ரெயிலரில் காணப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த நிலையில் அவரது டேட்ஸ் ஒத்துழைக்காததால், சுந்தர் சியே படத்தின் நாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து வழக்கமாக பேய் படங்களில் காணப்படும் விஷயங்களும் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் காணப்படுகிறது. கடந்த படங்களைப் போலவே இந்த நான்காவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் தமன்னா மற்றும் ராசி கண்ணாவின் கிளாமர் பாடலும் இடம் பெற்றுள்ளது. முந்தைய பாகங்களில் இடம் பெற்றது போல இந்த படத்திலும் ஒரு சாமி பாடல் உள்ளது. இந்த பாடலில் குஷ்பூ நடனமாடியுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











