சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3!

சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் அதன் பூஜை சமீபத்தில் நடைபெற்று உள்ளது.

தரமான காமெடி படங்களை

தரமான காமெடி படங்களை

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தரமான காமெடி படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சுந்தர் சி, கார்த்திக்கின் காம்போ வில் வெளியான திரைப்படங்கள் பல வெள்ளி விழா கொண்டாடி உள்ளது

அரண்மனை 3

அரண்மனை 3

இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டுள்ள சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் அரண்மனை 3. அரண்மனை முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றது அதைத் தொடர்ந்து அரண்மனை பாகம்-2 வெளியாகி அந்த படமும் வெற்றி பெற்றது இந்த நிலையில் அரண்மனை 3 சமீபத்தில் வெளியானது. ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்திருக்க மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் அரண்மனை 3 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மூன்று ஹீரோக்கள்

மூன்று ஹீரோக்கள்

இந்த நிலையில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நடிகர் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி தற்போது அடுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெய் ஜீவா ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். ராசி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

பட பூஜை

பட பூஜை

ஜீவா ஜெய் சுந்தர் சி கூட்டணியில் ஏற்கனவே கலகலப்பு-2 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது இந்த நிலையில் மீண்டும் இதே கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் ஜெய், ஜீவா,ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்கின்றனர். ராசி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா தத்தா இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எனவே இந்த படம் கலகலப்பு 3 இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது அதில் நடிகர்கள் ஜீவா,ஜெய், ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தா, சுந்தர் சி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X