நாய் சேகர், என்கவுன்டர் ஏகாம்பரம், டாக்டர் பூத்ரி...அப்புறம்? வைகைப்புயலுக்கு காத்திருக்கும் சுராஜ்!

By

சென்னை: வைகைப்புயல் வடிவேலுக்காக மட்டுமே காத்திருப்பதாக, இயக்குனர் சுராஜ் சொன்னார்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த படம், தலைநகரம். இதில், நாய் சேகராக, வைகைப் புயல் வடிவேலு மிரட்டியிருப்பார். இந்தப் படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகிவிட்டாலும், இதன் காமெடி காட்சிகள் இப்போது நினைத்தாலும் குபீர் சிரிப்பை, குபுக்கென்று கொட்ட வைக்கும். இதே போலதான் 'மருதமலை' படமும். இதையும் சுராஜ் இயக்கி இருந்தார். இதில் என்கண்வுடர் ஏகாம்பரமாக நடித்திருப்பார் சிரிப்பு கிங். இந்தப் படத்தின் காமெடி காட்சிகளும் அதிரிபுதிரிதான். பிறகு இந்த காம்பினேஷன் உடைந்தது.

Director suraj is waiting for vadivelu

அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த கத்தி சண்டை படத்தில் சுராஜுடன் இணைந்தார் வடிவேலு. இதில் டாக்டர் பூத்ரியாக நடித்திருந்தார். இப்போது வடிவேலு நடிப்பில் காமெடி படம் ஒன்றை இயக்க இருக்கிறார் சுராஜ். இந்த படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட வேண்டியது. ஆனால், வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடை காரணமாக, அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, கருத்து வேறுபாடு காரணமாக, வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இதையடுத்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்னை முடியும் வரை, வேறு படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கூறியது தயாரிப்பாளர் சங்கம்.

இதன் காரணமாக வடிவேலுவிடம் கதை சொல்லி, ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் வடிவேலுவை ஹீரோவாக நடிக்க வைத்து, 'பேய் மாமா' படத்தை இயக்க இருந்தார் டைரக்டர் ஷக்தி சிதம்பரம். வடிவேலுவுக்காக காத்திருக்க முடியாததால், யோகிபாபு ஹீரோவை அந்த படத்தைத் தொடங்கிவிட்டார், அவர்.

இதனால் சுராஜூம் வேறு நடிகரை வைத்து படம் இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி சுராஜிடம் கேட்டபோது, மறுத்தார்.

ம்ஹூம். நான் வடிவேலுக்காகத்தான் வெயிட் பண்றேன். வேறு யாரையும் வைத்து இந்தப் படத்தை இயக்கலை. அவருக்கான பிரச்னை விரைவில் முடிஞ்சிரும். பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. அடுத்த மாதம் ஷூட்டிங் போகலாம்னு இருக்கோம் என்றார் சுராஜ். இதுல அவரோட கேரக்டர் பேரு? என்று கேட்டால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்கிறார் சுராஜ்.

பண்ணுவோம்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X