Vadivelu - தனுஷை தரக்குறைவாக திட்டிய வடிவேலு - உண்மையை உடைத்த இயக்குநர்

சென்னை: Vadivelu (வடிவேலு) படிக்காதவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை வடிவேலு கண்டபடி திட்டிவிட்டார் என இயக்குநர் சுராஜ் தெரிவித்திருக்கிறார்.

நகைச்சுவையில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் வெடித்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற எந்த பாரபட்சமும் இல்லாம்ல் எல்லோருடனும் சேர்ந்து நடித்து அதகளம் செய்தார்.

Director Suraj Opens up About Vadivelu and Dhanush

பஞ்சாயத்து: வடிவேலுவின் கேரியர் உச்சத்தில் இருந்தபோது அரசியல் மேடையில் ஏறினார். அவர் என்று அரசியல் மேடை ஏறினாரோ அன்றிலிருந்து அவரது கேரியர் இறங்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதையே தயாரிப்பாளர்கள் தவிர்த்தனர். இதனால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் வடிவேலு. அதுமட்டுமின்றி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்தும் சேர்ந்துகொள்ள அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

ரீ என் ட்ரி: ஒருவழியாக வடிவேலுவுக்கு இருக்கும் பஞ்சாயத்துகள் பேசி சரி செய்யப்பட மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது. இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜின் மாமன்னன், பி.வாசுவின் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Director Suraj Opens up About Vadivelu and Dhanush

மீண்டும் ஆட்டம்: வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக வருவதில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போடுகிறார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது. இதனையடுத்து வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என பலர் கூறினர்.

தனுஷை திட்டிய வடிவேலு: வடிவேலு பீக்கில் இருந்தபோது சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் படிக்காதாவன். அந்தப் படத்தில் விவேக் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை முதலில் வடிவேலுதான் ஏற்றிருந்தார். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்றார். ஆனால் திடீரென விலகிவிட்டார். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இப்போது மற்றொரு காரணம் தெரியவந்திருக்கிறது. அதாவது படிக்காதவன் படத்தில் நடித்தபோது தனுஷை வடிவேலு கண்டப்டி திட்டிவிட்டதாகவும், அதனால்தான் அவர் படத்திலிருந்து விலக்கப்பட்டாராம். இதனை சுராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் இணையும் தனுஷ் - வடிவேலு: இந்தச் சூழலில் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இரண்டாவது முறையாக படம் இயக்குகிறார். அவர் இயக்கியிருக்கும் மாமன்னன் படத்தில் அவருக்கும் வடிவேலுவுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருப்பதால் தனுஷை வைத்து இயக்கும் படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தனுஷுக்கும், வடிவேலுவுக்கு முட்டியிருப்பதால் இந்த கூட்டணி சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X