படத்தின் தலைப்பை மாற்றிய சுசீந்திரன்... அவர் சொன்ன விளக்கத்தை பாருங்க

சென்னை : நடிகர் ஜெய் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவான படத்திற்கு சிவ சிவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில் தற்போது படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

படத்தின் தலைப்பு மாற்றம் அதற்கான காரணம் உள்ளிட்டவை பற்றி அவரே பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன்

வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் சுசீந்திரன் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.

ஈஸ்வரன் படம்

ஈஸ்வரன் படம்

சமீபத்தில் சிம்பு நடிப்பில் இவர் இயக்கியிருந்த ஈஸ்வரன் படம் கவனத்தை ஈர்த்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவிற்கு இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. சிறப்பான கம்பேக்காகவும் அவருக்கு இந்தப் படம் அமைந்தது.

டைட்டில் மாற்றம்

டைட்டில் மாற்றம்

இந்நிலையில் நடிகர் ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படத்திற்கு சிவ சிவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் இந்த டைட்டிலை மாற்றியுள்ளதாக சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

லென்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளதாகவும் விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். பைனல் மிக்சிங்கில் படத்தை பார்த்த நண்பர்கள், படம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மண்சார்ந்த கிராமத்து தலைப்பு

மண்சார்ந்த கிராமத்து தலைப்பு

ஆனால் கிராமம் சார்ந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதால் தலைப்பும் மண்சார்ந்த கிராமத்து தலைப்பாக இருந்தால் படத்திற்கு சிறப்பாக அமையும் என்று அவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு தயாரிப்பு தரப்புடன் கலந்தாலோசித்து தற்போது படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீரபாண்டியபுரம் தலைப்பு மாற்றம்

வீரபாண்டியபுரம் தலைப்பு மாற்றம்

படத்திற்கு வீர பாண்டியபுரம் என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு நடிகர் ஜெய் முதல் முறையாக இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X