மீண்டும் கபடியை கையிலெடுத்த வெண்ணிலா கபடி குழு இயக்குநர்!
சென்னை: வெண்ணிலா கபடி குழு படத்தை தொடர்ந்து மீண்டும் கபடியை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
தமிழ் சினிமாவில் விளையாட்டு விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றிய படங்களைப் பார்ப்பது அரிதான ஒன்று. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த 'கனா' படம் அந்த குறையைப் போக்கியது. அதற்கும் முன்பு வந்த 'இறுதிச் சுற்று’படமும் குத்து சண்டையை பற்றி பேசியது.

அதற்கடுத்து அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள 'பிகில்' படம் கால்பந்தாட்டம் விளையாடும் வீராங்கனைகளைப் பற்றிய படமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே சிங்கப் பெண்ணே பாடல் பெண்களின் தேசிய கீதம் என்ற எதிர் பார்ப்புடன் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதற்கடுத்ததாக, அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி நடித்து வெளிவர உள்ள 'கென்னடி கிளப்' படம் கபடி ஆடும் வீராங்கனைகளைப் பற்றிய படமாக வர உள்ளது. சுசீந்திரனுக்கு கபடி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு மூலம் நமது கவனத்தை ஈர்த்தவர்.

இரண்டு படங்களுமே வீராங்கனைகளைப் பற்றிய படங்கள்தான். விளையாட்டுக்கள்தான் வேறு வேறு. இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது, என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது என்பது இரண்டு படங்களும் வெளிவந்த பிறகுதான் தெரியும்.


Click it and Unblock the Notifications











