பிரபல இயக்குனர் விபத்தில் சிக்கினார்.. கை எலும்பு முறிந்தது.. மருத்துவமனையில் அனுமதி !

Recommended Video

Director Suseendran met an Accident | Sneha Delivery

சென்னை : இயக்குனர் சுசீந்திரன், இன்று காலை நடைபயிற்சியின் போது வாகனம் மோதியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து இயக்குனர்களுக்கும் தங்களது முதல் படம் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றாலும் அவர்களது அடுத்த படங்கள் இயக்க முடியாமல் போகும். ஆனால் இயக்குநர் சுசீந்திரன் அப்படி அல்ல தனது முதல் திரைப்படமான வெண்ணிலா கபடி குழு படத்திலேயே தனது முத்திரை பதித்து வெற்றி இயக்குனரானார்.

சமீபத்தில் கென்னடி க்ளப் மற்றும் சாம்பியன் படங்களை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் அதிகம் விளையாட்டை சார்ந்த படங்களை இயக்கியவர் சுசீந்திரன் தான்.

director suseenthiran got into an accident

இயக்குனர் சுசீந்திரன் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர். அதற்காக, எக்சசைஸ் செய்வது ஓடுவது என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது இவரின் வழக்கம்.

இந்நிலையில் இன்று, இவர் வழக்கம் போல நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது ஒரு பைக் மோதியது. இதனால் இவர் கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் கட்டாயம் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

director suseenthiran got into an accident

தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதனால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர், விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில், இவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X