Kanguva: பாகுபலி படம் போல கங்குவா படம் இருக்கு.. இயக்குநர் சுசீந்திரன் பாராட்டு!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூர்யாவின் அட்டகாசமான நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கங்குவா' கடந்த வாரம் தியேட்டரில் வெளியானது. இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சுசீந்திரன் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா திரைப்படமாக 10 மொழிகளில் தியேட்டரில் வெளியானது. அதில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், போஸ்வெங்கட், யோகி பாபு நடிப்பில் வெளியானது. படம் வெளியான நாளில் படம் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதிர், முதல் அரைமணி நேரம் செம மொக்கை என பலர் கழுவி ஊத்தியதால், சூர்யா திஷா பதானியுடன் ரொமான்ஸ் செய்வது, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லியின் எடுபடாத நகைச்சுவை காட்சி என 12 நிமிடக் காட்சியை படக்குழு கத்தரித்துள்ளது. தற்போது கங்குவா படம் 2.0 படமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி படம் போல: அனைவருக்கும் வணக்கம், நான் கங்குவா திரைப்படத்தை என்னுடைய பசங்களோட தியேட்டரில் சென்று பார்த்தேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணேன். தெலுங்குல பாகுபலி படம் எப்படி ஒரு பிரம்மாண்டமான படமாக இருந்ததோ. அதேபோல தமிழ்ல கங்குவா திரைப்படம் மிகவும் பிரமாண்டமான திரைப்படமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. படம் பார்க்க பார்க்க ரொம்ப எங்கேஜிங்கா இருந்தது.
சிறப்பாக இருக்கு: ஆனால் எதுக்கு படத்துக்கு எத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறது என்று தெரியல தயவு செய்து இந்த திரைப்படத்தை குடும்பத்தோட சென்று பாருங்க நிஜமா உங்களுக்கு இந்த திரைப்படம் ரொம்ப பிடிக்கும். ரொம்ப கவனமான ஒரு விஷயத்தை, அனைவரும் கடுமையாக உழைத்து பண்ணி இருக்காங்க. சூர்யா சார் ஓட நடிப்பு ஹவுஸ் ஸ்டாண்டிங் என்று தான் சொல்ல வேண்டும். அவர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் கஷ்டப்பட்டு படத்திற்காக பணியாற்றி இருக்கிறார்கள். சிறுத்தை சிவாவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











