சமூக வலைதளங்களுக்கு டாடா சொன்ன பிரபலம்.. காரணம் என்னன்னு பாருங்க!

சென்னை: வேலைப்பளு காரணமாக பிரபல இயக்குநர் ஒருவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான திரை பிரபலங்கள் தங்களின் படங்களை புரமோட் செய்வதற்கும் ரசிகர்களுடன் கலந்துரையாடவும் போட்டோக்கள் வீடியோக்களை ஷேர் செய்யவும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு சில சமூக அக்கறை கொண்ட பிரபலங்கள் மட்டுமே நாட்டு நடப்பு குறித்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரபலங்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன்.

வெள்ளைத்தாளில்

வெள்ளைத்தாளில்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த சுசீந்திரன், தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெள்ளைத்தாளில் எழுதி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் இயக்குநர் சுசீந்திரன்.

வேலைப்பளு

வேலைப்பளு

இந்நிலையில் கடைசியாக அதேபோன்று வெள்ளைத்தாளில் எழுதிய தனது பதிவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், அனைவருக்கும் வணக்கம், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய எனது சமூக வலைத்தளங்களில் இருந்து வேலைப்பளு காரணமாக விலகிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு ஹின்ட்

ரசிகர்களுக்கு ஹின்ட்

இதன் மூலம் சமூக வலைதளங்களில் அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் போலி கணக்குகனை பின்தொடர வேண்டாம் என அவர் தெரிவித்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் திரைப்படம் டிசம்பர் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சாம்பியன் படம்

சாம்பியன் படம்

சாம்பியன் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் ஒரு வாரம் முன்பாக ரிலீஸானது. இந்தப் படத்தில் விஷ்வா நாயகனாக அறிமுகமாகிறார். நரேன், சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் பிரபலமான மிரினாலினி ரவி, நடிகர் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X