புத்தாண்டு கொண்டாட்டம்: உச்ச நடிகர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்.. தைரியம்தான்.. வைரலாகும் கடுதாசி!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரபல இயக்குநர் உச்ச நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் திரைத்துறையின் தரமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் சுசீந்திரன்.

தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் 'கென்னடி கிளப்' மற்றும் 'சாம்பியன்' ஆகிய படங்கள் வெளியாயின.

அடுத்தப்படத்திற்கு ரெடி

அடுத்தப்படத்திற்கு ரெடி

இவரது படங்கள் பெரும்பாலும் விளையாட்டை மைய்யப்படுத்தியே இருக்கும். தற்போது மீண்டும் பெரிய நாயகர்களை இயக்க தயாராகி வருகிறார் சுசீந்திரன்.

 வேலைப்பளு காரணம்

வேலைப்பளு காரணம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த சுசீந்திரன், அண்மையில் அதிலிருந்து விலகுவதாக கூறினார். வேலைப்பளு காரணமாக விலகுவதாக தெரிவித்தார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்நிலையில் நாளை புத்தாண்டு கொண்டாடுப்படுவதை முன்னிட்டு இயக்குநர் சுசீந்திரன் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மரணமடையக்கூடாது

மரணமடையக்கூடாது

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடக்கும் விபத்தில் யாரும் மரணமடையக்கூடாது.. இதுவரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

என் அன்பான வேண்டுகோள் ரஜினிசார், கமல் சார், அஜித் சார், விஜய் சார் உங்களை இவ்வளவு உயரத்தில் தூக்கிப்பிடித்திருக்கும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வைரலாகும் கடிதம்

வைரலாகும் கடிதம்

இவ்வாறு சுசீந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். சுசீந்திரனின் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X