இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம் ‘சர்பட்டா பரம்பரை’… மனம் திறந்து பாராட்டி சுசீந்திரன் !
சென்னை : இயக்குனர் சுசீந்திரன் சர்பட்டா பரம்பரை படம் குறித்து மனம் திறந்து பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், இப்படத்தில் வேலை பார்த்த நடித்த அனைவருக்குமே நிச்சயம் விருது கிடைக்கும் என்றார்.
மேலும், இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் சர்பட்ட பரம்பரை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

சர்பட்டா பரம்பரை
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாகக் வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமான சர்பட்டா பரம்பரை திரைப்படம் உருவாகி உள்ளது. வட சென்னை பகுதி மக்களின் முக்கிய விளையாட்டாக பாக்ஸிங் உள்ளது.

பலரும் பாராட்டினர்
ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா, பசுபதி ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்களும், பிரபலங்களுக்கு புகழ்ந்து வருகின்றனர்.

விருது நிச்சயம்
அந்த வகையில் இயக்குனர் சசீந்திரன் இப்படத்தை வெகுவாக பாராட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர் ரஞ்சித்தின் சர்பட்டா பரம்பரை படம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரஞ்சித்தின் மிகச்சிறந்த திரைப்படம். ஒரு பீல்டை அழகா கண்ணு முன்னாடி கொண்டு வந்து இருக்காரு. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தில் வேலை பார்த்த நடித்த அனைவருக்குமே நிச்சயம் விருது கிடைக்கும் என்று சுசீந்திரன் கூறினார்.

ஒரு முக்கியமான படம்
மேலும் பேசிய அவர், ஆர்யா மிகவும் கடுமையா உழைச்சி இருக்காரு, இப்பத்தான் அவருக்கான களம் கிடைச்சி இருக்குனு நான் நினைக்கிறேன். ரொம்ப இயல்பா இருந்தது படம் மாதிரியே தெரியல. அனைவரும் ரொம்ப அழக நடிச்சி இருக்கிறார்கள். அனைருக்கும் என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் சர்பட்ட பரம்பரை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











