வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் ஜெய்… சிவ சிவா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை : இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் சிவ சிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலசரவணன் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு முதல் முதலாக ஜெய் இசையமைக்க உள்ளார்.இதுஅவரின் 30வது திரைப்படமாகும்.

பிரபலமானார்

பிரபலமானார்

நடிகர் ஜெய் விஜய் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட்டான பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கிய 600028 என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

ஒரு நல்ல பெயரை பெற்றார்

ஒரு நல்ல பெயரை பெற்றார்

சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் அழகர் கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார். இந்தப் படம் காலாகாலத்துக்கும் பேசப்படும் படமாக அமைந்து ஜெய்க்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 80கள் காலகட்டத்தை அப்படியே கொண்டுவந்து, கொண்டாட்டமான நட்பு, அழகான காதல், அதிர வைக்கும் துரோகம், உறைய வைக்கும் வன்முறை என படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தது. அந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப் படமாகத் திகழ்ந்தது.

ராஜா ராணி திருப்புமுனை

ராஜா ராணி திருப்புமுனை

சரோஜா, வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா,நவீன சரஸ்வதி சபதம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அட்லியின் இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படம் ஜெய்க்கு ஒரு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.

படப்பிடிப்புக்கு வரவில்லை

படப்பிடிப்புக்கு வரவில்லை

ராஜா ராணி படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் கிடைத்த நல்ல வாய்ப்புகளை கோட்டைவிட்டார். மேலும், இவர் மீது படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

ஏராளமான திரைப்படம்

ஏராளமான திரைப்படம்

ஜெய் தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பார்ட்டி, குற்றமே குற்றம், கோபி நைனார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், இயக்குனர் பத்ரி இயக்கத்தில் ஒரு படத்திலும்,சுந்தர் சி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சுசீந்திரன் இயக்கும் படத்திற்கு சிவ சிவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட

வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட

தற்போது வெளியாகி உள்ள மோஷன் போஸ்டரில் டிராக்டருக்கு நடுவே கத்தியால் குத்தப்பட்டு அங்காங்கே ஆட்கள் சிதறி கிடக்கிறார்கள். மேலும், வேட்டி சட்டையில் பெரிய வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட , கண்ணில் கோபத்துடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார் ஜெய். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த மோஷன் போஸ்டர் மிகவும் வைரலாகி வருகிறது.

ஜெய்யின் 30வது படம்

ஜெய்யின் 30வது படம்

இத்திரைப்படத்தை லென்டி ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட் மற்றும் பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தனை நாள், நடிகராக வலம் வந்த ஜெய் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இது ஜெய்யின் 30வது திரைப்படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X