Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
’வெண்ணிலா கபடி குழு’ ஹரி வைரவன் மறைவு.. ரொம்ப வேதனையா இருக்கு.. இயக்குநர் சுசீந்திரன் வருத்தம்!
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஹரி வைரவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 38.
சிறுநீரகம் செயலிழந்து விட்ட நிலையில், அதற்கான சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணிக்கு உயிரிழந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் விஷ்ணு விஷாலை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பில்
கலந்துக்கொள்கிறார்
பாரதிராஜா..
இயக்குநர்
சுசீந்திரன்
மகிழ்ச்சி
தகவல்!

ஹரி வைரவன் நடித்த படங்கள்
காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் சுசீந்திரன் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள ஹரி வைரவன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும்ர் அசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

38 வயதில் மரணம்
80 வயதை கடந்து வரவேண்டிய மரணமெல்லாம் மாறி வரும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சீக்கிரமாகவே உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அதிவிரைவாக முடிந்து வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விவேக், புனீத் ராஜ்குமார், கே.வி. ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள், சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நடிகர் ஹரி வைரவனும் வெறும் 38 வயதிலேயே உயிரிழந்தது பெரும் எச்சரிக்கை மணியாகவே மாறி உள்ளது.

ஆட்டிப்படைத்த வறுமை
உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள பணம் கூட இல்லாமல் ஓட்டு வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் வறுமையில் வாடி வந்த ஹரி வைரவனுக்கு விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட நடிகர்கள் கடைசி நேரத்தில் அவர் வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட பிறகு தான் ஓடி வந்து உதவி செய்தனர். ஆனால், சிகிச்சைக்கு பிறகு குணமாகி விடுவார் என அவரது மனைவி ரொம்பவே நம்பிக்கை வைத்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

சுசீந்திரன் இரங்கல் வீடியோ
விஷ்ணு விஷால், அம்பானி சங்கர் உள்ளிட்ட சினிமா நடிகர்கள் ஹரி வைரவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் ஹரி வைரவனை நடிக்க வைத்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது வீடியோ வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த வைரவன் காலமானார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.