அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்தா நல்லா இருக்கும்.. சொல்கிறார் சுசீந்திரன்!

அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்த நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்- வீடியோ

சென்னை: அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்த நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலையை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் பரபரப்பான கருத்துக்களை கூறி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடவுள் படம் சமயத்தில் நடிகர் அஜித்தையே அன்புச்செழியன் மிரட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Director Suseenthiran wants Kamal and Ajith to be the next CM

அன்புச்செழியனால் நடிகர் அஜித், இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் கவுதமேனன் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார். இது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.

அதாவது சினிமாத்துறையில் இருந்து அடுத்த முதல்வராக வர தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு தனது பதில் கமல் மற்றும் அஜித் என கூறியுள்ளார். அவர்கள் அடுத்த முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் இந்த விருப்பம் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X