நீண்ட நாட்களுக்கு பிறகு மழை.. சென்னை மழையை கை தட்டி வரவேற்ற இயக்குநர் சுசீந்திரன்! #chennai rains

சென்னை: சென்னையில் சுமார் 200 நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் கடுமையான வெயிலும் அனல்காற்றும் மக்களை பாடாய்படுத்தி வந்தது. கொளுத்தும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர்.

பகலில் கொளுத்திய வெயிலால் இரவிலும் புழுக்கம் நிறைந்து ஏசி இல்லாமல் தூங்கவே முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டனர் சென்னை மக்கள். இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

மழையால் மகிழ்ச்சி

மழையால் மகிழ்ச்சி

இந்நிலையில் இன்று பிற்பகல் சென்னையின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மழையை ரசித்த மக்கள்

மழையை ரசித்த மக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை நனைத்த மழையை மக்கள் தங்களின் வீட்டு பால்கனியில் நின்றபடியும் வீட்டு வாசலில் நின்றபடியும் பார்த்து ரசித்தனர். சென்னையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

ரசித்த இயக்குநர்

ரசித்த இயக்குநர்

சென்னையில் பெய்த மழையை டிவிட்டரில் பலரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் காரில் சென்றபடியே சென்னை சாலைகளில் பெய்த மழையை ரசித்துள்ளார்.

கைதட்டி வரவேற்ற இயக்குநர்

அதனை வீடியோவாக படம் பிடித்த அவர், தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது என பதிவிட்டு மழையை கைத்தட்டி வரவேற்றுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X