சுசீந்திரன் இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி படம்.. 38 நாட்கள்ல சூட்டிங்கை முடித்து அசத்திய டீம்!
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது அடுத்தப் படைப்பாக உருவாகியுள்ளது 2K லவ் ஸ்டோரி படம். இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
ரொமான்ஸ் ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வெட்டிங் போட்டோகிராஃபி எடுக்கும் இளைஞர்களின் டீமில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக இந்தப் படத்தில் கூற முற்பட்டுள்ளதாக சுசீந்திரன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன்: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை பெற்று வெற்றிப்படங்களாக மாறிவருகின்றன. அந்த வகையில் அவரது இயக்கத்தில் இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையை சொல்லும் காதல் படமாக 2K லவ் ஸ்டோரி படம் உருவாகியுள்ளது. City light pictures தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி முடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது ஒட்டுமொத்தமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
2K லவ் ஸ்டோரி படம்: இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்க்கையை ரொமான்ஸ் கலந்து இந்தப் படத்தில் கூறியுள்ளார் சுசீந்திரன். படத்தின் சூட்டிங்கை 38 நாட்களில் சரியான திட்டமிடலுடன் முடித்துள்ளார். 2K தலைமுறையினரின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வெட்டிங்க் போட்டோகிராஃபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
10வது முறையாக கூட்டணி: அறிமுக நாயகன் ஜெகவீர் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோவையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் ஒரே கட்டமாக 38 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் 10வது முறையாக சுசீந்திரன் -டி இமான் கூட்டணி இணைந்துள்ளது.
விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்: இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துவங்கவுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் உள்ளிட்டவை குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











