வந்தாச்சு..வந்தாச்சு.. வேற வழி..? பிரபல இயக்குனரை இன்ஸ்டாவுக்குத் திருப்பிய கொரோனா லாக்டவுன்!
சென்னை: கொரோனா லாக்டவுன், பிரபல இயக்குனரை இன்ஸ்டாகிராமுக்குத் திருப்பி இருக்கிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொடூரமாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸுக்கு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

கொரோனா
ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த உயிர்க்கொள்ளித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 872 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,020 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

போட்டோ, வீடியோ
இதையடுத்து வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் மூழ்கியுள்ளனர். நடிகர், நடிகைகள் தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பதை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர், தங்களது பழைய போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

லாக்டவுன் காரணமாக
சமூக வலைத்தளப் பக்கங்களில் கணக்குகள் தொடங்காத பலர் லாக்டவுன் காரணமாக, தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இயக்குனர் சுசி கணேசன், இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது, வீட்டுப் பால்கனியில் வளர்ந்துள்ள செர்ரியின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

பால்கனியில் செர்ரி
அதில், இயற்கைக்கு லாக்டவுன் இல்லை. மும்பையில், 40 வது மாடியில் உள்ள எனது வீட்டுப் பால்கனியில், செர்ரி' என்று குறிப்பிட்டுள்ளார். அவரை பலர் இன்ஸ்டாவுக்கு வரவேற்றுள்ளனர். தமிழ், பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன். திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

பான் இந்தியா படம்
லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்ததாக தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும், பான் இந்தியா படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பெரிய ஹீரோ நடிக்கும் அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











