வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் சூட்டிங்கின்போது ஜெட் ஸ்கை ஓட்டியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து விஜய் ஆண்டனி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வந்துள்ளார். துள்ளலிசை பாடல்களை இவர் அதிகமாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தற்போது இவரது படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பில் விபத்து
இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி வந்தார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கடலில் ஸ்கை ஜெட் ஓட்டும் காட்சியின் சூட்டிங் நடத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை
இந்த சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய பற்கள் உடைந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

சுசீந்திரன் விளக்கம்
இந்நிலையில் அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்நிலையில், இந்த தகவல்களை பிரபல இயக்குநர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்
அதில் விஜய் ஆண்டனி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து இரு தினங்கள் ஆகியுள்ளதாகவும் அவர் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் ரசிகர்களிடம் வீடியோவில் பேசுவார் என்றும் அவர் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











