twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி.பி.கஜேந்திரனின் பட்ஜெட் சினிமா: படப்பிடிப்பு நடக்கும்போதே தற்கொலை செய்த பிரபல நடிகையின் தம்பி!

    By
    |

    சென்னை: பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் தனது சினிமா அனுபவங்களை பட்ஜெட் சினிமா என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

    விசு, கே.ஆர்.விஜயா, பாண்டியன், சீதா நடித்த வீடு மனைவி மக்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் டி.பி.கஜேந்திரன்.

    பட்ஜெட் சினிமாவின் பக்காவான டைரக்டர் என்று கூறப்படும் டி.பி.கஜேந்திரன், ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார்.

     இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா.. வாயில் விளையாடிய பார்த்திபன்.. விஜய் இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா.. வாயில் விளையாடிய பார்த்திபன்.. விஜய் "சேது" பதி கப்சிப்!

    பாண்டி நாட்டு தங்கம்

    பாண்டி நாட்டு தங்கம்

    நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். இதயம் என்ற டிவி தொடரிலும் நடித்திருக்கிறார்.
    ராமராஜன் நடித்த எங்க ஊர் காவல்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை, கார்த்திக், நிரோஷா நடித்த பாண்டி நாட்டு தங்கம், ராஜ்கிரண் நடித்த பாசமுள்ள பாண்டியரே, பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் உட்பட பல ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர், இப்போது தனது சினிமா அனுபவங்களை பட்ஜெட் சினிமா என்ற பெயரில் புத்தமாக உருவாக்கி இருக்கிறார்.

    திடீரென்று மழை

    திடீரென்று மழை

    அதாவது, தான் இயக்கிய படங்களைக் கொண்டு, ஒவ்வொரு படத்தையும் பட்ஜெட்டுக்குள் எப்படி இயக்கினேன், அப்போது நடந்த சுவையானச் சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் பல பகீர் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. தனது முதல் படமான 'வீடு மனைவி மக்கள்' படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங். படத்தின் நாயகன் வீட்டின் முன் காட்சி படமாக்கப்பட வேண்டும். ஆனால், திடீரென்று மழை. எல்லோரும் வெயிட் பண்ண, மழை காட்சியாக அதை மாற்றி எடுத்திருக்கிறார் டி.பி.கஜேந்திரன்.

    நடிகை ஊர்வசி தம்பி

    நடிகை ஊர்வசி தம்பி

    இதே படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது, அந்த காட்சிக்கு செயற்கை மழையை உருவாக்கி இருக்கிறார்கள். நடிகை ஊர்வசியின் தம்பி நந்து ஹீரோவாக நடித்த படம், கொஞ்சும் கிளி. இதில் ரகுவரன், ஜனகராஜன், சாரதா பிரீதா, நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர். இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். படத்தில், ஊர்வசியின் தம்பி நந்து, சாரதா பிரீதாவை காதலிப்பார்.

    படம் நின்றுவிட்டது

    படம் நின்றுவிட்டது

    படத்தைப் போலவே நிஜத்திலும் அவர் ஒருவரை காதலித்து வந்தார். அவரின் நிஜ காதலி திடீர் என தற்கொலை செய்துகொள்ள, நந்துவும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் படம் அப்படியே நின்றுவிட்டது. பிறகு காட்சிகளை அப்படி இப்படி மாற்றி அந்தப் படத்தை முடித்திருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் கொஞ்சம் அதிர்ச்சி, அதிக சுவாரஸ்யம் என தனது அனுபவங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

    பைம்பொழில் மீரான்

    பைம்பொழில் மீரான்

    இதை தொகுத்திருப்பவர், பத்திரிகையாளர் பைம்பொழில் மீரான். இதுபற்றி இயக்குனர் டி.பி.கஜேந்திரனிடம் கேட்டபோது, 'இதற்குள் அந்த புத்தகம் வெளிவந்திருக்க வேண்டும். கொரோனா லாக்டவுன் காரணமாக, அது தள்ளிப் போயிருக்கிறது. சகஜ நிலைக்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை வெளியிட உள்ளோம். பல சுவாரஸ்யமான தகவல்கள் இதில் இருக்கின்றன' என்கிறார்.

    Read more about: tamil cinema
    English summary
    Director T.P.Gajendran has written a book titled, Budget cinema, this book contains his film experience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X