நயன்தாரா சரியான கோவக்காரி.. நெப்போலியன் நல்ல பாசமான ஆளு.. பளிச்சென பேசிய இயக்குநர் ஹரி!

சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகிறது அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஷால் ஒரு பக்கம் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் ஹரியும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் தான் முதன்முறையாக நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவர் ரொம்ப கோவக்காரி என ஹரி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Director talks about Nayanthara Napolean and other actors who worked in his movies

மேலும், நெப்போலியன் குறித்து பேசும்போது அவர் ரொம்ப பாசக்காரர் என அவரை பற்றி இயக்குநர் ஹரி பேசியுள்ளார்.

கோவக்காரி நயன்தாரா: நடிகை நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் ரொம்பவே கோவக்காரியாக இருந்தார் என இயக்குநர் ஹரி தனது ரத்னம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்போதே இந்த பொண்ணு இப்படி ஃபயரா இருக்காரே நிச்சயம் பெரியளவுக்கு வருவார் என நினைத்தேன். ஆனால், இந்த அளவுக்கு அவர் லேடி சூப்பர் ஸ்டாராக வருவார் என நினைக்கவில்லை என பேசியுள்ளார். காஸ்ட்யூம்லாம் சரியில்லை என கத்துவார். நான் தான் சென்று அந்த பஞ்சாயத்தை எல்லாம் முடித்து வைப்பேன். நடிப்பு என வந்துவிட்டால் அப்போதே ரொம்ப சின்சியராக இருப்பார். அதுதான் அவரது வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

பாசக்கார நெப்போலியன்: நெப்போலியன் போட்டோ காட்டி இவரை பற்றி என்ன சொல்வீங்க என கேட்டதுமே நெப்போலியன் ரொம்ப பாசக்காரர். ஒரு பெரிய அண்ணன் போலவே ஷூட்டிங்கில் இருக்கும் அனைவரையும் அரவணைத்து பார்த்துக் கொள்வார். சென்னைக்கு எப்போது வந்தாலும் நான் அவரை சென்று பார்ப்பேன். அவர் என்னை வந்து சந்திப்பார். மகனுக்காக சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நல்ல மனுஷன் என நெப்போலியன் குறித்து பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா எப்படி?: ஆறு படத்தில் தர லோக்கலாக சவுண்டு சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா பற்றி பேசும் போது, அவங்க ரொம்பவே புரொபஷனலான ஆர்ட்டிஸ்ட். நல்லா படிச்சிருக்காங்க, அவங்க ரியல் கேரக்டரே வேற, ஆனால், அப்படி லோக்கலாக பேசி நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் நடித்து மிரட்டிட்டாங்க, என்னோட படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X