சிம்பு-நயன்தாரா லிப்லாக் சீன்.. காரணமே ஏ.ஆர்.முருகதாஸ் தான்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் சிம்புவின் இயக்கத்தில் உருவான வல்லவன் படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமா சென், காதல் சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்புவும் நயன்தாராவும் உதட்டை கடித்துக்கொள்ளும் காட்சி வெளியாகி அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசி உள்ள இயக்குநர் ஒருவர் அந்த முத்தக்காட்சி எடுக்க என்ன காரணம் என்பதை கூறியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நந்தவனம் நந்தகுமார், கஜினி படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் நயன்தாராவிற்கு சொன்னபோது, இரண்டு கதாநாயகிகள் கதை என்றும், முதல் ஹீரோயின் பிளாஷ் பேக்கில் வந்து செல்வார் என்றும், இருந்தாலும் உங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியதால் நயன்தாரா அந்த படத்தில் கமிட் ஆகிவிட்டார். கஜினி படத்திற்காக நயன்தாரா 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் படத்தின் சூட்டிங் 10 நாட்களிலேயே முடிந்து விட்டது. மீண்டும், படப்பிடிப்புக்கு அழைப்பார்கள் என நயன்தாரா காத்திருந்த நேரத்தில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக தகவல் வெளியானதும், நயன்தாரா கோபமடைந்தார்.

simbu nayanthara vallavan

கடுப்பான நயன்: இது தொடர்ந்து கஜினி படம் வெளியான போது தான் அந்த படத்தின் மொத்த கதாபாத்திரமும் அசினை தொடர்ந்தே நடக்கிறது என்றும் தன்னை ஜூனியர் நடிகையாக பயன்படுத்தி விட்டார்கள் என்ற கோபத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் மீது கொலை காண்டில் இருந்தார். இந்த நேரத்தில் தான் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நயன்தாரா கமிட் ஆனார்.அப்போது நயன்தாரா சிம்புவிடம், கஜினி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை துணைநடிகை போல பயன்படுத்தி விட்டார் என்ற ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

லிப் லாக் சீன்: இதனால் சிம்பு, வல்லவன் படத்தில் அந்த லிப்லாக் போஸ்டரை வெளியிட்டு ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த போஸ்டர் வெளியான போது அனைவரும் கஜினியில் நடித்த அசினை மறந்துவிட்டு, யாருடா இந்த நயன்தாரா என கேட்கும் அளவிற்கு ஒரே ஒரு போஸ்டரில் உலக ஃபேமஸாகி விட்டார் நயன்தாரா. இதுதான், நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் மலர காரணமாக இருந்தது. சிம்பு மற்றும் நயன்தாரா காதலித்த அந்த கால கட்டத்தில் நானும் அவர்களுடன் நெருக்கமாக பயணித்தேன், அந்த காரணத்திற்காகத்தான் இப்போது வரை பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.

நயன்தாரா உதவி: நயன்தாராவுக்கும் சிம்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த பிறகு, சிம்புவிற்கு யார் யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கெல்லாம் நயன்தாரா வாய்ப்பு கொடுத்து உதவி செய்தார். அதேபோலதான் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனுக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார். ஒரு கட்டத்தில் லைக்கா நிறுவனம் கோலமாவு கோகிலா படத்தை எடுக்க தயங்கிய போது, நயன்தாரா அதில் தலையிட்டு, லைகாவிடம் பேசி படம் வெளியேற வெளிவர மிக உதவியாக இருந்தார்.

நயன்தாரா போட்ட பிச்சை: இன்று நெல்சன் எவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான், அவர் மட்டும் அந்த நேரத்தில் லைகாவிடம் பேசவில்லை என்றால், கோலமாவு கோகிலா படமே வந்து இருக்காது. நயன்தாரா போட்ட பிச்சையில் தான் நெல்சன் வளர்ந்தார். என்னையும் சிம்புவிற்கு பிடிக்காது எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே சிம்புவும் நயன்தாராவும் பழகிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும் என்பதால் நயன்தாரா என்னை வளர்த்து விட விரும்பவில்லை என்று அந்த பேட்டியில் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X