விரைவில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி... சூடாக வந்த அப்டேட்... ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியானதும் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில், விஜய்யின் படத்தையும் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

 வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தைத் தொடர்ந்து விரைவில் விடுதலை படத்தின் செகண்ட் பார்ட்டும் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் உள்ள விடுதலை வெற்றிமாறன் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

 விஜய் - வெற்றிமாறன் கூட்டணி

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி

விடுதலையை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய் - வெற்றிமாறன் கூட்டணி விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே விஜய்க்கு ஒரு கதை கூறியிருந்தார் வெற்றிமாறன். ஆனால், அந்தப் படம் குறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

 மீண்டும் ரெடியான விஜய்

மீண்டும் ரெடியான விஜய்

ஆனால், தற்போது வெற்றிமாறனுடன் இணைய விஜய் ரெடியாகிவிட்டாராம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்பது சீக்ரெட்டாக உள்ளது. இதுகுறித்து இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், டாணாக்காரன் படத்தின் இயக்குநரும், வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட்டுமான தமிழ் இக்கூட்டணி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

 விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

சமீபத்தில் இயக்குநர் தமிழ் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதில், "விஜய் சார் வெற்றிமாறன் இணையும் படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்தக் கூட்டணி பற்றி அப்டேட் வெளியாகலாம்" என தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், விஜய்க்கு கதை சொன்னதாக வெற்றிமாறன் பேசியிருந்த பழைய பேட்டியையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 எதிர்பார்ப்பில் கோலிவுட்

எதிர்பார்ப்பில் கோலிவுட்

இந்நிலையில், ஏற்கனவே விஜய்க்காக சொன்ன கதையை வெற்றிமாறன் இயக்கவுள்ளாரா அல்லது புதிதாக கதை ரெடி செய்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வாடிவாசல், வடசென்னை 2 படங்களை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது விஜய்யுடன் தான் வெற்றிமாறன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X