நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல ரெடி.. லப்பர் பந்து இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு!
சென்னை: கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்த படம் லப்பர் பந்து. படத்தின் முதல் காட்சி தொடங்கி, கடைசி காட்சி வரையிலும் சரி, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. ஹரீஸ் கலயான், தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலா சரவணன், காளி வெங்கட் என நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதியுடன் ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். மேலும் அடுத்து தனுஷை இயக்கவுள்ளதால், நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்லக் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், " நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..
இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு...ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் 🙏❤️❤️. இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.. தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு ...நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படமான இட்லி கடை படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.



Click it and Unblock the Notifications











