twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டப் பஞ்சாயத்தினால் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம்: ஆண் தேவதை இயக்குனர் தாமிரா

    |

    சென்னை: கட்டப் பஞ்சாயத்தினால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குனர் தாமிரா தெரிவித்துள்ளார்.

    தாமிராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்த படம் ஆண் தேவதை. கடந்த 12 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு பாராட்டப்பட்டது.

    Director Thamira about his loss

    இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான தாமிரா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    இயக்குனர் தாமிரா கூறியதாவது..

    ஆண் தேவதை திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள் வந்தன. வினியோகஸ்தர்கள் சங்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.

    3.20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரித்தேன், ஆனால் படம் விற்பனையானது ரூ. 20 லட்சத்திற்கு தான். இப்படத்தின் மூலம் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இங்கு சிறிய படங்களை பிழைக்க விடுவதில்லை. சிறு படங்களுக்காக வணிகம் நடந்தால் தான் சினிமா உயிர்ப்போடு இருக்கும்.

    எங்கள் படத்திற்கு திரையரங்கங்கள் கிடைப்பதில் பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 130 திரையரங்குகளில் தான் படம் வெளியானது. மேலும் காட்சிகளும் சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். மாலைக் காட்சியில் தான் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் ஆண் தேவதைக்கு காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளே கிடைத்தன.

    எவ்வளவு தான் படங்களுக்கு விளம்பரம் செய்தாலும், வாய்வழியாகப் பரப்பப்படும் தகவல்கள் மூலம் தான் படம் வெற்றியடைகிறது. சிறிய படங்களுக்கான பிரச்சனைகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வினியோகஸ்தர்கள் சங்கத்திலும் பேசுகிறார்கள். ஆனால் தீர்வு எட்டப்படவிலை என்றார்.

    English summary
    Director Thamira said, he has lost Rs. 2.5 crore due to Katta panjayathu in distributors council.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X