ரெட்டைச்சுழி பட இயக்குநர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநரான தாமிரா காலமானார். அவருக்கு வயது 53.

Recommended Video

Ramya Pandian -ன் ஆண் தேவதை பட இயக்குனர் காலமானார் | RIP Thamira

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் உயிரிழப்பும் உச்சத்தை எட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இயக்குநர் தாமிரா

இயக்குநர் தாமிரா

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குநரான தாமிரா கொரோனாவால் இன்று உயிரிழந்தார். இயக்குநர் தாமிரா, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

ரெட்டைச்சுழி

ரெட்டைச்சுழி

2010ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டைச் சுழி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயக்குநர்கள் பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் சேர்த்து நடிக்க வைத்து தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றார்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரை வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் இயக்குநர் தாமிரா.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமிரா இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X