இனி யாரோடும் பகைமுரண் இல்லை.. வைரலாகும் இயக்குநர் தாமிராவின் கடைசி பதிவு.. கலங்கும் ரசிகர்கள்!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் தாமிரா இன்று மரணமடைந்த நிலையில் அவருடைய கடைசி பேஸ்புக் பதிவு பலரையும் கலங்க செய்துள்ளது.

Recommended Video

Ramya Pandian -ன் ஆண் தேவதை பட இயக்குனர் காலமானார் | RIP Thamira

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் ஒரு உச்சத்தை தொட்டு வருகிறது.

சாமானிய மக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், குழந்தைகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இயக்குநர் தாமிரா மரணம்

இயக்குநர் தாமிரா மரணம்

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குநரான தாமிரா இன்று காலை மரணமடைந்தார். தமிழில் ரெட்டைச்சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தாமிரா.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

முதல் படத்திலேயே இயக்குநர்கள் கே பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து வைத்து இயக்கி பலரின் கவனத்தையும் பெற்றார். அடுத்ததாக சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தை இயக்கினார்.

சிகிச்சை பலனின்றி பலி

சிகிச்சை பலனின்றி பலி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் தாமிரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடைசி பதிவு

கடைசி பதிவு

அவரது மறைவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் தாமிரா கடைசியாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த பதிவு பலரையும் கலங்க செய்துள்ளது.

யாவரும் கேளீர்..

யாவரும் கேளீர்..

அதாவது கடந்த 11ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் கடைசியாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார் தாமிரா. அதில் அவர், தெரிவித்திருப்பதாவது, இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளீர்.. என பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவே கடைசி பதிவாகிவிட்டதே என கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு அற்புத கலைஞனை இழந்து விட்டோமே என்றும் பதிவிட்டு வருகின்றனர். பலரையும் கலங்க செய்துள்ள அவரது இந்த கடைசி பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X