twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிரில் இருப்பவரை பேசவிட்டு ரசிப்பார் கலைஞர்! தங்கர் பச்சான்!

    எதிரில் இருப்பவர்களை பேசவிட்டு ரசிப்பவர் கலைஞர் என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

    |

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி எதிரில் இருப்பவர்களை பேசவிட்டு ரசிப்பார் என இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Director Thangar about kalaignar!

    இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான், கலைஞருடன் உள்ள நெருக்கம் பற்றி கூறியுள்ளார்.

    மிகப்பெரிய தலைவர் என்பதால் முன் அனுமதி வாங்க்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கலைஞரை பார்க்க வருபவர்களுக்கு கிடையாதாம். ஒருவருக்கு தேவை இருக்கிறது, அவசரமாக கலைஞரை சந்திக்க வேண்டும் என நினைத்தால் உடனே பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவாராம் கலைஞர்.

    காலம் பொன்போன்றது என்பார்கள், அதை எப்போதும் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். சூரியன் உதிக்கும் முன்பே எழுந்தால்தான் சூரியனை விட வேகமாக ஓடமுடியும் என கூறி அதை செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் கலை, இலக்கியம் என வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாராம் கலைஞர்.
    உலக இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கலைஞருக்கு எப்போது வெளிநாடுகளுக்குச் சென்றாலும், பல புத்தகங்களை வாங்கி வந்து அன்பு பரிசாக தங்கர் கொடுப்பாராம். அவற்றை வெகு சீக்கிரமாக படித்து முடித்துவிட்டு அடுத்து புத்தகங்கள் எப்போ எனக் கேட்பாராம் கலைஞர்.

    அவர் பேசுவதை விட, எதிரிலிருப்பவர்களை நன்றாக பேசவிட்டு அதை உன்னிப்பாக கவனிப்பார் கலைஞர் எனக் கூறும் தங்கர் பச்சான், அவர் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படம் கலைஞருக்கு மிகவும் பிடித்த படம் எனக் கூறுகிறார். ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் பள்ளிக்கூடம் போல் இன்னுமொரு படம் எடுக்கவேண்டும் என கூறியுள்ளார் என கலைஞர் சொல்வாராம்.

    English summary
    Director Thangar Bachan shared his memory about DMK Leader Karunanidhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X