எல்லாமே பொய்.. நம்பாதீங்க.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் பரபரப்பு புகார்!

சென்னை: தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவி வருவதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

'என் மீது அவதூறு பரப்புகிறார்கள்' - Director Thangar Bachan Speech | Oneindia Tamil

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிராக தமிழ் சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் என பலரும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆதரிப்பதாக தகவல் பரவல்

ஆதரிப்பதாக தகவல் பரவல்

இந்நிலையில் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார். ஆனால் இயக்குனர் தங்கர்பச்சான் புதிய ஒளிப்பதிவு சட்டத்தை ஆதரித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரவி வருகிறது.

வதந்தி பரப்புகிறார்கள்

வதந்தி பரப்புகிறார்கள்

இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே தான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

முற்றிலும் தவறானது

முற்றிலும் தவறானது

தன்னைப் பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

அழகி படத்தின் மூலம்

அழகி படத்தின் மூலம்

அழகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான தங்கர் பச்சான் சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தக்கு முக்கு திக்கு தாளம்

தக்கு முக்கு திக்கு தாளம்

தற்போது அவரது மகன் விஜித் பச்சானை வைத்து தக்கு முக்கு திக்கு தாளம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X