தமிழின் தரமான இயக்குநர்.. மகனை ஹீரோவாக்குகிறார்!

சென்னை: தமிழில் தரமான இயக்குநர்களில் ஒருவரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

திரைத்துறையில் வாரிசுகள் வருவது ஒன்றும் புதிதல்ல. பல நடிகர்களின் மகன்கள் வாரிசுகளாக திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளனர்.

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரின் மகனான விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தங்கர் பச்சானின் மகன்

தங்கர் பச்சானின் மகன்

இதேபோல் டி ராஜேந்தரின் மகன் சிம்பு, கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் என பலரின் வாரிசுகள் திரைத்துறையில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழில் தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குநர் தங்கர் பச்சானின் மகனும் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இயக்கங்கள்

இயக்கங்கள்

இயக்குநர் தங்கர்பச்சான், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

அரசியல் கருத்து

அரசியல் கருத்து

பார்த்திபன், சேரன், சத்யராஜ், உள்ளிட்டோர் இவரது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார் தங்கர் பச்சான்.

மகனை ஹீரோவாக்கும் இயக்குநர்

மகனை ஹீரோவாக்கும் இயக்குநர்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கர் பச்சான் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தனது மகனை அவர் ஹீரோவாக அறிமுகம் செய்கிறர்.

பிரபுதேவாவிடம் நடனம்

பிரபுதேவாவிடம் நடனம்

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் நடிகர் பிரபு தேவாவிடம் நடனம் கற்றுக்கொண்டார். சண்டை பயிற்சியும் எடுத்துக்கொண்டார் விஜித் பச்சான்.

நடிகர் பட்டாளம்

நடிகர் பட்டாளம்

இந்த படத்தில் கதாநாயகிகளாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X