இணைய கூலிகள் போலி செய்தி பரப்புவதா? தங்கர் பச்சான் எச்சரிக்கை!

சென்னை: இயக்குனர் தங்கர் பச்சான் தன் பெயரில் போலி செய்தி பரப்பப்படுவதற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் தனது உருவ படங்களை பயன்படுத்தியும், பெயரை பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட " சாத்தான் குளம் இரட்டைக் கொலை" குறித்து தனது பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் ஒருவர் அவருக்கு அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் தான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார் என தங்கர் பச்சன் கோவத்தை காட்டி உள்ளார்

இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன் என்று தனக்கு தெரிந்த ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் சொல்லி இந்த பதிவை வெளியிட்டு உள்ளார்.

அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்

அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்

நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் WhatsApp, எனது Twitter, Facebook இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். இவைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் இயங்கும் இவைகளில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை என்று தெளிவுப்படுத்தி உள்ளார் .

எந்த செய்திகள் வந்தாலும்

எந்த செய்திகள் வந்தாலும்

இனி தன்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய எல்லா நட்பு வட்டாரங்களிடமும் தெரிவித்து உள்ளார்

பிரபலங்கள்

பிரபலங்கள்

பொதுவாகவே நிறைய விஷயங்கள் இப்போதெல்லாம் யார் சொன்னார் என்று தெரியாமல் வாட்சாப்பில் ஒரு பெரிய பதிவை சொல்லி விட்டு சொன்னவர் காந்தி, திருவள்ளுவர் , அப்துல் கலாம் என்று அவர் அவருக்கு பிடித்த பெயர்களை சொல்லிவிடுகின்றனர் . நல்ல கருத்துகளுக்கே இந்த நிலை . சர்ச்சைக்குரிய கருத்துக்குள் என்றால் இன்னமும் கொஞ்சம் சிக்கல் ஜாஸ்தி ஆகி விடுகிறது.

இணையதள விஷகிருமிகள்

இணையதள விஷகிருமிகள்

சமீபத்தில் பாடகி ஜானகி பற்றி வந்த வதந்தி , அதற்கு பிறகு அது வதந்தி என்று புரிய வைப்பதுற்குள் பெரும் பாடாகி விட்டது. பிரபலங்களை ப்ராம்ளங்களாக எளிதில் மாட்ட வைக்க இந்த இணையதள விஷ கிருமிகள் நிறைய உள்ளனர். சைபர் கிரைம் பல நடவடிக்கைகள் எடுத்தும் பிரச்சனைகள் முடிந்தபாடு இல்லை என்பது தான் வேதனை. இந்த விஷயத்தில் சமீபத்திய வரவு தங்கர் பச்சன். இவரது பிரச்சனைகளும் எளிதில் முடியும் என்று நம்புவோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X