ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான தர்ஷன்.. சிறைக்கு சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த இயக்குநர்!
சென்னை: பிரபல கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் இருக்கும் நிலையில், இயக்குநர் தருண் சுதீர், தனது வருங்கால மனைவி நடிகை சோனலுடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வந்து, திருமண அழைப்பிதழை, தர்ஷனிடம் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சேலஞ்சிங் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார். 2006ம் ஆண்டு தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான ஜோதே ஜோதேயலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து சினிமாவில் நடிகராக மாறினார். அதன் பின், அனதாரு, கிராந்திவீர, சங்கொல்லி ராயண்ணா என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

ரேணுகா சாமி கொலை : நடிகர் தர்ஷனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கும் நிலையில், அவர் பவித்ரா கவுடாவுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவர், பவித்ரா கவுடாவால் தான் தர்ஷனுக்கு அவப்பெயர் வருகிறது என்பதால், சமூக வலைதளத்தில் பவித்ரா கவுடா குறித்து மோசமாக கமெண்ட் செய்து வந்தார். இதையடுத்து, ரேணுகா சாமி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது. ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் தர்ஷன், அவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து தற்போது தர்ஷன் சிறையில் இருக்கிறார். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
சிறையில் பத்திரிக்கை: இந்நிலையில், இயக்குநர் தருண் சுதீர், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வந்து, தனது திருமண அழைப்பிதழை, தர்ஷனிடம் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார். இயக்குநர் தருண் சுதீருக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி வரவேற்பு மற்றும் 11ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை சோனலை காதலித்த நிலையில், இவர்களின் காதலை வீட்டில் சொல்லி திருமண பேச்சை முன் நின்று நடத்தியவர் தர்ஷன் தான் என கூறப்படுகிறது. இதனால், திருமண அழைப்பிதழை முதலில் தர்ஷனுக்கு கொடுக்க வேண்டுமேன விரும்பியதாக கூறினார். இதையடுத்து நேற்று சோனலும் தர்ஷனும் வந்து அழைப்பிதழை கொடுத்துள்ளனர். தர்ஷன் நடிப்பில் தயாரான, 'காட்டேரா' 2023 டிசம்பரில் திரைக்கு வந்து, அமோகமாக வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தை தருண் சுதீர் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











