அப்பா மகன் பாசத்தோடு கால் டாக்சி பாலியல் தொல்லை பற்றி பேசும் மிஸ்டர் சந்திரமௌலி!

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா மகன் பாசத்தையும் தாண்டி மற்றொரு விஷயம் சொல்லப்பட்டிருப்பதாக இயக்குனர் திரு கூறியுள்ளார்.

Recommended Video

மிஸ்டர் சந்திரமௌலி ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் திரு!- வீடியோ

சென்னை: மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா மகன் பாசம் மட்டுமல்லாமல், மற்றொரு முக்கியமான விஷயமும் சொல்லப்பட்டிருப்பதாக இயக்குனர் திரு தெரிவித்துள்ளார்.

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'.

Director Thiru opens secret on Mr.chandramouli

இந்த படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தில் அவர்கள் தந்தை மகனானவே நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குனர் திரு, படத்தில் அப்பா மகன் பாசத்தையும் தாண்டி மற்றொரு விஷயம் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறினார்.

விழாவில் அவர் பேசியதாவது, "முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம்.

அப்பா மகன் பாசம், உறவு பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்தில் அதை இது வேறு ஒரு கோணத்தில் காட்டியுள்ளோம். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.
இதைத்தவிர படத்தில் மற்றொரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசியுள்ளோம். கால் டாக்சி கலாச்சாரம் இன்று பரவலாக இருக்கிறது. சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளோம்.

விண்டேஜ் கார்த்திக்கை இந்த படத்தில் பார்ப்பீர்கள். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார்.

மகேந்திரன் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்" என இயக்குனர் திரு கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X