நிஜ வாழ்க்கையிலும் காதல்கோட்டை சூர்யாக்கள்...அனுபவத்தை பகிர்ந்த டைரக்டர் திரு
சென்னை : தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், சந்திரமவுலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் திரு. இவர் தெலுங்கில் கோபிசந்த் நடித்த சாணக்கியா படத்தையும் இயக்கி உள்ளார். இவர் டைரக்டர் அகத்தியனின் மருமகனும், குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியின் கணவரும் ஆவார். சமூக வலைதளத்தில் தற்போது இவர் பகிர்ந்துள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திரு,2 வாரங்களுக்கு முன் தனது பர்சை வழியில் தவற விட்டுள்ளார். அதில் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. பல இடங்களில் தனது பர்சை திரு தேடி உள்ளார். ஆனால் அது கிடைக்கவில்லை.

தொலைந்து போன பர்ஸ்
இதனால் இனி அவை கிடைக்காது, தேடுவதில் பயனில்லை என நினைத்து திரு விட்டுள்ளார். ஆனால் வழியில் கிடந்த திருவின் பர்சை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து விட்டு, திருப்பிக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.இந்த சம்பவத்தை மிக உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திரு பதிவிட்டுள்ளார்.

நிஜத்திலும் சூர்யாக்கள்
அதில், தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு எதாவது கிடைச்சிருக்கா..? எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, After 2 weeks.. காதல்கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் னெ குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேயம் இன்னும் உள்ளது
பர்சை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த மோகன் என்பவருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள திரு, மனிதநேயம் இன்னும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். காதல் கோட்டை படத்தில் இளம்பெண் ஒருவர் தொலைத்த சான்றிதழை, ஹீரோ சூர்யா பத்திரமாக அவரிடம் சேர்ப்பார். அதை குறிப்பிட்டு திரு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்ப்ரைஸ் கொடுக்க திரு திட்டம்
திரு இதுவரை தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை. இருந்தாலும் அனைவரும் ஆச்சரியப்படும்படி முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்க உள்ளதாக ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











