சாணி காயிதம் டிரைலரை பார்த்துட்டு பிரபல டைரக்டர் கேட்ட கேள்வி...மிரண்டு போன ரசிகர்கள்

சென்னை : சாணி காயிதம் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு பிரபல டைரக்டர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரின் கமெண்டை பார்த்த பிறகு பலரும் வேகமாக ஓடிச் சென்று அந்த டிரைலரை மீண்டும் மீண்டும் பார்த்துள்ளனர்.

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணி காயிதம். இந்த படம் நேரடியாக ஓடிடியில் மே 6 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கிரைம் திரில்லர் கதையாக 1980 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

பட்டையை கிளப்பிய டிரைலர்

பட்டையை கிளப்பிய டிரைலர்

Lizzie Antony மிக முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உருக்கமான டிரைலரை வெளியிட்டுள்ளனர். செவன் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பழிவாங்க துடிக்கும் பொன்னி

பழிவாங்க துடிக்கும் பொன்னி

இந்த டிரைலரை வைத்து பார்க்கையில் கீர்த்தி சுரேஷ், பொன்னி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தனது வாழ்க்கையை துயரமானதாக மாற்றிய ஒருவரை பழிவாங்க துடிக்கும் கேரக்டர். அவரது அண்ணன் சங்கைய்யாவாக செல்வராகவன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஒருவரை பழிவாங்க போட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பது படத்தின் கதை.

உருக்கமாக கதை சொன்ன கீர்த்தி

உருக்கமாக கதை சொன்ன கீர்த்தி

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவருமே போட்டி போட்டு மிக அற்புதமாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் மிக பரிதாபமாக, உருக்கமாக தனது பழிவாங்கும் கதையை சொல்வதாக டிரைலர் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு அவதாரத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவருமே நடித்துள்ளனர். இந்த டிரைலரின் லிங்கை டைரக்டர் அருண் மாதேஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

டைரக்டர் கேட்ட ஒரு கேள்வி

டைரக்டர் கேட்ட ஒரு கேள்வி

இந்நிலையில் இதை ரீட்வீட் செய்து, டிரைலரை பார்த்த டைரக்டர் து.பா.சரவணன், யபா...என்ன சார் இப்படி பண்ணி வச்சிருக்கிங்க என கேட்டுள்ளார். ட்விட்டரில் சரவணன் கேட்ட இந்த கேள்விக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சரவணன், சமீபத்தில் விஷால் நடித்து வெளியான வீரமே வாகை சூடும் படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் பாராட்டையும் பெற்று விட்டார். இந்த படம் தமிழை விட தெலுங்கில் செம ஹிட் ஆனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X