சூப்பர் டீலக்ஸ் இயக்குனருக்கு 43 வயசு.. ரசிகர்கள்.. விஐபிக்கள் வாழ்த்து !

சென்னை : இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு பல ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Super Deluxe Best Film Award | Kerala critics choice award | Thiagarajan Kumararaja

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கமெர்சியல், த்ரில்லர், சை ன்ஸ் ஃபிக்சன், காமெடி என பல வகை படங்கள் வெளியாகிறது. ஒவ்வொரு தரப்பு படங்களுக்கும் ஒவ்வொரு தரப்பில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனருக்கும் வெவ்வேறு தனித்துவங்கள் இருக்கும். தற்போது மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் உருவாகின்றன.

 Director Thyagarajan KumaraRaja is celebrating his birthday today

அந்த மாற்றங்களுக்கு பல இளம் இயக்குனர்கள் காரணம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என இரண்டே படங்கள் இயக்கி இருந்தாலும் சிறந்த முதல் பட இயக்குனருக்கான நேஷனல் விருதை பெற்றார். மக்கள் இடையே இப்படங்கள் பெரும் ஆதரவை பெற்றது என்று சொன்னால் அது மிகை ஆகாது .

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றார். பின் படிப்பை பாதியில் விட்ட இவர் சினிமாவை நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் சில விளம்பர படங்கள் எடுத்தார், கடைசியாக 2011ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்தை கொடுத்தார். திரைப்பட விமர்சகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். அதன் பின் சில படங்களுக்கு வசனம், பாடல் வரிகள் போன்றவை எழுதினார்.

 Director Thyagarajan KumaraRaja is celebrating his birthday today

பல வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை கொடுத்தார். 4 விதமான கதையை உள்ளடக்கி எடுத்த இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியிலும் பல சினிமா ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது இன்றளவும் சிறந்த திரைக்கதை உள்ள படமாக இவரின் இரண்டு படங்களும் கருதப்படுகிறது.

 Director Thyagarajan KumaraRaja is celebrating his birthday today

இன்று இவர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் இவரின் ரசிகர்கள் அவரின் இரண்டு படங்களை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பலத் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தியேட்டர்களில் படம் பார்க்க வரும் மக்களை அவர் தன் படத்தின் ட்ரைலர் மூலம் இந்த படம் எப்படிப்பட்டது என முடிவு செய்ய வேண்டும் என்ற ஒரு வித்யாசமான கண்ணோட்டம் கொண்டவர். இவரின் பிறந்த நாளில் பல நல்ல படங்கள் இன்னும் இவர் தரவேண்டும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X