TJ Gnanavel: முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்தது சூர்யாதான்.. டைரக்டர் டிஜே ஞானவேல் நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் நடித்து வெளியான ஜெய்பீம் படம் சூர்யா கேரியரில் மட்டுமில்லாமல் டிஜே ஞானவேல் கேரியரிலும் பெஸ்ட்டாக அமைந்தது. இந்த படம் அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் பட வாய்ப்பையும் டிஜே ஞானவேலுக்கு பெற்றுக் கொடுத்தது. அந்த அளவிற்கு மிகவும் அழுத்தமான மற்றும் வலிமையான கதைக்களத்தை ஜெய் பீம் படத்தில் அணுகியிருந்தார் டிஜே ஞானவேல்.

இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்த சூர்யாவும் அழுத்தமான மற்றும் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கேரியரில் சூர்யா முதல் செங்கல்லை சிறப்பாக எடுத்து வைத்துள்ளதாகவும் அது தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நியாபகம் இருக்கும் என்றும் டிஜே ஞானவேல் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

suriya jai bhim movie tj gnanavel

ஜெய்பீம் படம்: சூர்யாவின் ஜெய்பீம் படத்தை கொடுத்து தன்னை கோலிவுட்டின் மிகச் சிறப்பான இயக்குநராக வெளிப்படுத்தியவர் டிஜே ஞானவேல். இந்த படத்தில் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் கதைக்களத்தை அமைத்திருந்தார் ஞானவேல். சூர்யாவின் பெஸ்ட் படங்களில் இந்தப் படமும் இணைந்து கொண்டது. இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் மிகச்சிறப்பாக வடிவமைத்திருந்தார். ஜெய்பீம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது. வேட்டையன் படத்தையும் சிறப்பாகவே கையாண்டிருந்தார் டிஜே ஞானவேல்.

ரஜினியுடன் வேட்டையன் படம்: இந்தப் படத்திலும் போலி என்கவுண்டர் மற்றும் கல்விக்கு எதிரான செயல்பாடுகளை வெளுத்து வாங்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாராட்டுகளை குவிக்கவும் தவறவில்லை. படம் கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வசூலை பெற்றிருந்தது. இந்தப் படம் ரஜினிகாந்தை மிகவும் சிறப்பாக இம்ப்ரஸ் செய்துள்ள நிலையில் மீண்டும் ரஜினிகாந்துடன் ஞானவேல் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா எடுத்துவைத்த முதல் செங்கல்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் மீண்டும் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணைவாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தன்னுடைய கேரியரில் சூர்யா தான் முதல் செங்கல்லை எடுத்து வைத்ததாக டிஜே ஞானவேல் தன்னுடைய பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளராக தான் சூர்யாவிடம் முதலில் கதையை சொன்னபோது, அந்த மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு வந்துள்ளது குறித்து பாராட்டியதுடன் தனக்கு பிடித்தது போல இயக்குமாறு முழு சுதந்திரமும் கொடுத்ததாக டிஜே ஞானவேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூர்யா கொடுத்த ஒத்துழைப்பு: மேலும் படத்தின் பல பிரச்சினைகளை சமாளித்து முழு ஒத்தழைப்பு கொடுத்ததாகவும் ஞானவேல் குறிப்பிட்டுள்ளார். தான் இனிமேலும் பெயர் சொல்லும் படங்களை இயக்கினாலும் ஜெய்பீம் படம் அவற்றிற்கெல்லாம் அஸ்திவாரமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சூர்யா தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான மனிதர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். பேராசிரியராக ஆக படித்துக் கொண்டிருந்த தான் பத்திரிகையாளராக மாறிய நிலையில், தன்னுடைய அடையாளமே மாறிவிட்டதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X