‘வேட்டையன் 2’ வேறமாதிரி இருக்கும்..இயக்குநர் கொடுத்த தரமான அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் தியேட்டரில் வசூலை அள்ளிவரும் நிலையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தரமான தகவலை கூறியுள்ளார் இயக்கநர் ஞானவேல். வேட்டையன் இரண்டாம் பாகம் முதல் பாகம் போல இல்லாமல், வேற மாதிரி கதைக்களம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாக திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளார். மேலும், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயம் என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து தியேட்டரையே தெறிக்கவிட்டு விட்டார்.

வேட்டையன்: போலி என்கவுன்டர்கள் மற்றும் கல்வி மோசடி போன்ற பொதுமக்களின் பிரச்சனையை வேட்டையன் திரைப்படம் பேசி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு பின் இந்த படத்திலும் ரஜினி துப்பாக்கியை கையில் எடுத்து அதியன் என்ற ரோலில் மாஸ் காட்டி உள்ளார். சூப்பர் ஸ்டாரின் அதிரடியான நடிப்பு, அனிருத்தின் தெறிக்கவிட்ட இசை படம் தியேட்டரில் பட்டையை கிளப்பியது.வேட்டையன் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றுடன் படம் வெளியாகி பத்து நாள் ஆகி உள்ளது. படம் ஒன்பது நாளில் 300 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேட்டையன் 2: வேட்டையன் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தரமான தகவலை ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ளார்.அதில், வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இப்போது நடந்த கதைக்கு முன்கதையாக திட்டமிட்டால் நன்றாக இருக்கும். ஆகையால் அதியன் எப்படி என்கவுன்ட்டர் அதிகாரியாக உருவானார். ஃபகத் பாசில் திருடனாக இருந்தும், எதற்கு காவல்துறைக்கு உதவி செய்பவராக மாறினார் உள்ளிட்டவற்றை வைத்து 'வேட்டையன் 2" பாகத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாக தா.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
தோசா கிங்: இயக்குநர் தா.செ.ஞானவேல். 'வேட்டையன்' படத்துக்குப் பிறகு சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'தோசா கிங்' என்கிற பெயரில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார். மும்பையைச் சேர்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ்' இப்படத்தை இயக்க உள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு வேட்டையன் இரண்டாம் பாகத்தின் கதைக்களம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











