வேட்டையன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா ஏன் மாறினாரு.. ரஜினிகாந்த் கேரக்டர் ரகசியம் சொன்ன டிஜே ஞானவேல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியார், அமிதாபச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் இணைந்துள்ள வேட்டையன் படத்தை இயக்கி முடித்துள்ளார் டிஜே ஞானவேல். தன்னுடைய முந்தைய படமான ஜெய்பீம் படத்தை போல கருத்து மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல் இந்த படத்தை மாஸ் என்டர்டெயினராக உருவாக்கியுள்ளார் டிஜே ஞானவேல்.

வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த சுவாரசியங்களை படக்குழுவினர் தங்களது அடுத்தடுத்த பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது படத்தின் இயக்குநரும் பிரபல வாரயிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் படத்தின் பல சுவாரசியங்கள் மற்றும் சீக்ரெட்களை பகிர்ந்துள்ளார்.

rajinikanth vettaiyan movie tj gnanavel

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ள வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ரஜினி சொன்ன குட்டிக்கதை: தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமாக தான் சொல்லும் குட்டிக்கதையுடன் இந்த இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு அனைத்து தரப்பினரையும் மிக அதிகமாக கவர்ந்துள்ளது. வேட்டையன் படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் மனசிலாயோ பாடலை உருவாக்கிய தினேஷ் மாஸ்டர், வசந்தி மாஸ்டர் ஆகியோரும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துள்ளனர்.

வேட்டையன் பட பிரமோஷன்கள்: இவர்களின் பேட்டிகளில் படம் குறித்த பல தகவல்கள், சுவாரஸ்யங்கள் வெளிப்பட்ட நிலையில் படத்தின் இயக்குநர் சும்மா இருக்க முடியுமா? படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேலும் தன் பங்கிற்கு பிரபல வாரயிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் அடுத்தடுத்த சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் எஸ் பி கேரக்டர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளது குறித்து அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் ஏன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா மாறினார், அதற்கான காரணம் ஆகியவற்றை இந்த படத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் டிஜே ஞானவேல் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

rajinikanth vettaiyan movie tj gnanavel

ரஜினியின் நடிப்பு: மேலும் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர் என்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்புத்திறமை சிறப்பாகவெளிப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள ஞானவேல், ஆனால் இதை ரஜினியிடம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் கூறியுள்ளார். வேட்டையன் படத்தில் அவரது நடிப்பின் பல பரிணாமங்களை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிக்கான நானோ, எனக்காக அவரோ இந்தப் படத்திற்காக மாறவில்லை என்றும், அவரது இமேஜை பாதிக்காத வகையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகவும் டிஜே ஞானவேல் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X