குரு பாலசந்தருக்கு கொடுத்ததை போலவே.. ரஜினிகாந்துடன் வேட்டையன் பட அனுபவத்தை பகிர்ந்த டிஜே ஞானவேல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ள வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கான அதிகபட்சமான ப்ரோமோஷன்களில் தற்போது லைகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
படத்தின் நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு ஒவ்வொரு முறை விமானம் மூலம் கூலி படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் போதும் வேட்டையன் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டின்போதும் அவர் தன்னுடைய உற்சாகத்தை குட்டி கதை மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் இயக்குனர் டிஜே ஞானவேல் குறித்தும் பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், இயக்குனர் டிஜே ஞானவேல், அபிராமி உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து வேட்டையன் படம் குறித்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
பாலசந்தருக்கு கொடுத்த மரியாதை: இதையடுத்து வேட்டையன் படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே இந்தப் படம் குறித்தும் ரஜினிகாந்த் குறித்தும் பல விஷயங்களை தன்னுடைய தற்போதைய பேட்டிய்ல பகிர்ந்துள்ள வேட்டையன் படத்தின் இயக்குநர் டிஜே ஞானவேல், தான் இதுவரை இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நிலையிலும், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குரு பாலச்சந்தருக்கு கொடுத்த அதே மரியாதையை தனக்கும் கொடுத்ததாக தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டாராக நீடிக்க காரணம்: அவரது இந்த பண்புதான் இதுநாள் வரையில் அவரை சூப்பர்ஸ்டாராகவே வைத்துள்ளதாகவும் டிஜே ஞானவேல் கூறியுள்ளார். ரஜினிகாந்துக்கு எப்போதுமே ஸ்கிரிப்டுகளை படிப்பதை காட்டிலும் கேட்பதிலேயே விருப்பம் அதிகம் என்றும் தான் முதல் முறையாக வேட்டையன் படத்தின் கதையை கூறிய நிலையில் இரு தினங்களில் அதை உள்வாங்கிக் கொண்ட ரஜினிகாந்த், அடுத்தடுத்து படம் குறித்த பல்வேறு கேள்விகளை, சந்தேகங்களை தன்னிடம் எழுப்பியதாகவும் அதிகாலையில் கூட அவரது கேள்விகள் வாய்ஸ் மெசேஜ் மூலம் தனக்கு அனுப்புவார் என்றும் டிஜே ஞானவேல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் சந்தேகம்: இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்டில் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு அது குறித்த சந்தேகங்களை ரஜினிகாந்த் எழுப்புவார் என்றும் ஞானவேல் கூறியுள்ளார். தன்னுடைய கேரக்டரை படத்தில் எப்படி எடுததுச் செல்வது என்பது குறித்தும் ரஜினிகாந்த் திட்டமிட்டு அதுகுறித்தும் தன்னிடம் அதிகமான அளவில் பேசுவார் என்றும் ஞானவேல் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்திற்காக தானோ அல்லது ரஜினிகாந்தோ எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளவில்லை என்றும் ரஜினியின் இமேஜ் கெடாதவகையில் இந்தப் படத்தை தான் இயக்கியுள்ளதாகவும் டிஜே ஞானவேல் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











