ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டாங்க.. இயக்குநர் வேதனை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாபச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விட்டதாக டிஜே ஞானவேல் குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர்களுடன் இணைந்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

rajinikanth vettaiyan movie tj gnanavel

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் படம் ரசிகர்களை கவரவே செய்தது. ஆயினும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்த படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிராகவும் கல்வி கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கதைக்களமாக கொண்டிருந்தார் இயக்குநர் டிஜே ஞானவேல். படத்தில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன், பகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

வேட்டையன் படம்: அமிதாப்பச்சன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துடன் இந்த படத்தின் மூலம் இணைந்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிசல்ட் குறித்து பேசியுள்ள டிஜே ஞானவேல், படத்தின் நாயகனுக்கு பிடிக்காதவர்களும் தனக்கு பிடிக்காதவர்களும் இந்த படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது என்பது நாம் அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார்.

டிஜே ஞானவேல் வேதனை: படங்கள் ரிலீசானால் அதுகுறித்த விமர்சனங்களை பார்க்கும் வழக்கம் அனைவருக்கும் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒருமுறை படம் மோசம் என்ற பார்வை ரசிகர்களுக்கு வந்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பதைபோலத்தான் இதுவும் என்று தெரிவித்துள்ள அவர், பிடிக்காதவர்களின் படங்களுக்கு உடனே கள்ளிப்பால் ஊற்றும் மனப்பான்மை அநேகம் பேருக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கருத்திற்கு எதிரான மனநிலையை கொண்டவர்கள், தனக்கு எதிராக பேசத்தான் செய்வார்கள் என்பதைத்தான் இந்த மனநிலை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் கூட்டணி: வேட்டையன் படத்தில் பல தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறிய வேடங்களில் நடித்தவர்கள் என பலரும் இருந்த நிலையில், அந்தப்படம் கீழே விழுந்தால் அவர்களும் கீழே விழுந்ததாகவே அர்த்தம் என்றும் அவர்களில் சிலர் 10 ஆண்டுகள் காத்திருந்து அந்த வாய்ப்பை பெற்றவர்கள் என்றும் ஞானவேல் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப்படம் ரஜினிகாந்த் -டிஜே ஞானவேலுக்கு சிறப்பாக அமையவில்லை என்ற போதிலும் மீண்டும் இந்த காம்பினேஷன் இணையவுள்ளதமாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X