படம் புடிச்சி இருக்கா? ரஜினியை பார்த்து ஒவ்வொரு நொடியும் கூஸ்பம்ஸ்.. ஞானவேல் பேட்டி!
சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் வேட்டையன் திரைப்படம் வெளியாகி உள்ளது. ரோகிணி தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்த டிஜே ஞானவேல், படம் புடிச்சி இருக்கா, ரஜினியை திரையில் பார்த்து ஒவ்வொரு நொடியும் கூஸ்பம்ஸ் என பேட்டியில் கூறியுள்ளார்.
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, இன்று தியேட்டரில் வேட்டையன் திரைப்படம் வெளியானது.படத்தை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். படத்தின் முன்பதிவு டிக்கெட் புக்கிங்கில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ள நிலையில், படத்தைப்பார்த்த ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிலாய்த்து பேசி வருகின்றனர்.

வேட்டையன் பராக்: ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை ஆர்வத்துடன் ரசித்துப்பார்த்தனர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னை ரோகினி திரையரங்கில் கண்டுகளித்தார். அதேபோல் வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், ரஜினிகாந்தின் மனைவி லதா, ஐஸ்வர்யா, சௌந்தர்யா என அனைவரும் முதல் காட்சியை பார்த்தனர். அதே போல, சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ரஜினி ரசிகர்களுடன் நடிகர் விஜய் வேட்டையன் படத்தை மாறு வேடத்தில் வந்து பார்த்ததாக வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
கூஸ்பம்ஸ்: இந்நிலையில், ரோகிணி தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்த TJ ஞானவேல் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், படம் எப்படி இருக்கிறது என்று நீங்க நான் சொல்ல வேண்டும். தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் படத்தை ரசித்து ரசித்து பார்த்தார்கள். நான் அவரின் ரசிகனாக இருந்து படத்தை பார்த்து இருக்கிறேன். இப்போது இயக்குநராக இருந்து இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது கூஸ்பம்ஸாக இருக்கிறது என்றார்.
ஜெய்பீம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், இந்த படம் தியேட்டரில் வெளியாகி இருக்கு இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர் கேட்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த மகிழ்ச்சியை எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரிவில்லை. இந்த மகிழ்ச்சியை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று TJ ஞானவேல் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











