பாஜக வேட்பாளர் தோற்றதால் சோகம்.. தலையை மொட்டை அடித்துக் கொண்ட பிரபல இயக்குநர்!

பாஜக வேட்பாளர் தோற்றதால் இயக்குநர் அலி அக்பர் தனது தலைக்கு மொட்டை அடித்துள்ளார்.

By Staff

திருவனந்தபுரம்: கேரளாவில் தனது நண்பரும், பாஜக வேட்பாளருமான கும்மனம் தோல்வியுற்றதால், பிரபல இயக்குநர் அலி அக்பர் தனது தலைக்கு மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் கும்மனம் ராஜசேகரன். இவருக்கு ஆதரவாக பிரபல இயக்குநர் அலி அக்பர் பிரச்சாரம் செய்திருந்தார். அப்போது அவர், 'இந்தத் தேர்தலில் கும்மனம் நிச்சயம் ஜெயிப்பார். ஒருவேளை அவர் தோற்றால் எனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொள்கிறேன்' என சவால் விடுத்திருந்தார்.

director tonsured his head on election result

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில், கும்மனம் தோல்வியுற்றார். இதனால் கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு, தனது முடியை மொட்டை அடித்துள்ளார் அலி அக்பர்.

மொட்டைத் தலையுடன் புதிய போட்டோ ஒன்றை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு, கும்மனம் அவர்கள் தோல்வி அடைவார் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் அவர் சோகமாக தெரிவித்துள்ளார்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற நிஜமாகவே மொட்டை அடித்துக் கொன்ற அலி அக்பரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அலி அக்பர் மலையாளத்தில் முகமுத்ரா, குடும்ப வார்த்தகள் உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X