twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    TP Gajendran: அந்த பட்ஜெட் பத்மநாபனை மறக்க முடியுமா? டி.பி. கஜேந்திரனின் கலகலப்பான திரைப் பயணம்!

    |

    சென்னை: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என சமீப காலமாக காமெடியும் செட்டாகாமல் கதையும் செட்டாகாமல் சில இயக்குநர்கள் படங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், உண்மையிலேயே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர் டி.பி. கஜேந்திரன் தான். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாக மாறி உள்ளது.

    உயரத்தை விட உள்ளம் பெரியதென்று தனது அறிவால் 1988ம் ஆண்டு வீடு மனைவி மக்கள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் டி.பி. கஜேந்திரன்.

    இயக்குநர் விசு மற்றும் மோகன் காந்தி ராமன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் மினிமம் பட்ஜெட்டில் தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுக்காமல் வெற்றிப் படங்களை எடுப்பது எப்படி என்கிற பாடத்தையே தமிழ் சினிமாவுக்கு கற்றுக் கொடுத்தவர் என்றே சொல்லலாம்.

     திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... இயக்குநர் டிபி கஜேந்திரன் மறைவு... சோகத்தில் ரசிகர்கள்! திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... இயக்குநர் டிபி கஜேந்திரன் மறைவு... சோகத்தில் ரசிகர்கள்!

    டி.பி. கஜேந்திரன் காலமானார்

    டி.பி. கஜேந்திரன் காலமானார்

    சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை இயக்குநர் டி.பி. கஜேந்திரன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென வலி ஏற்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் நல்ல மனங்கொண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்த டி.பி. கஜேந்திரன் இன்று நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அவரது வயது 68.

    மு.க. ஸ்டாலினின் கிளாஸ்மேட்

    மு.க. ஸ்டாலினின் கிளாஸ்மேட்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கல்லூரி தோழர் தான் டி.பி. கஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. டி.பி. கஜேந்திரனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நேரில் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    சினிமாவில் அறிமுகம்

    சினிமாவில் அறிமுகம்

    குறைந்த பட்ஜெட்டில் வீட்டுக்குள்ளே சிறந்த கதையம்சம் கொண்ட குடும்ப படங்களை இயக்கி வந்த இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், தனது குருநாதர் விசுவை வைத்தே 1988ம் ஆண்டு வீடு மனைவி மக்கள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் டி.பி. கஜேந்திரன். பின்னர், நடிகர் ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

    பிரபுவுடன் நல்ல நட்பு

    பிரபுவுடன் நல்ல நட்பு

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான இளைய திலகம் பிரபுவுடன் இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. 1990ம் ஆண்டு நல்ல காலம் பொறந்தாச்சு படத்தை பிரபுவை வைத்து இயக்கினார். அதன் பின்னர் டி.பி. கஜேந்திரன் மற்றும் பிரபு கூட்டணியில் வெளியான பல படங்கள் ரசிகர்களை இன்னமும் சிரிப்பலையில் ஆழ்த்தி வருகின்றன.

    பட்ஜெட் பத்மநாபன்

    பட்ஜெட் பத்மநாபன்

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நிலையில், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் தங்களுக்கான இடங்களில் பெரியளவில் ஸ்கோர் செய்து வந்தனர். 2000ல் வெளியான பட்ஜெட் பதமநாபன் திரைப்படம் நடிகர் பிரபுவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து மிடில்கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் படங்களை அடுத்தடுத்த வருடங்களில் இந்த கூட்டணி கொடுத்து மக்களை சிரிக்க வைத்தவர்.

    கமெடிக்கு பஞ்சம் இருக்காது

    கமெடிக்கு பஞ்சம் இருக்காது

    இயக்குநர் விசு இயக்கத்தில் வெளியான சிதம்பர ரகசியம் படத்திலேயே நடிகராகவும் அறிமுகமானார் டி.பி. கஜேந்திரன். ஏகப்பட்ட படங்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி இருப்பார். இவரது படங்களிலும் வடிவேலு, விவேக் செய்த காமெடி காட்சிகள் எல்லாம் இன்னமும் பல காமெடி சேனல்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director TP Gajendran gives many comedy movies and entertain fans in his life journey. His sudden demise makes fans and Cinema Celebrities shocks and many of them mourn for the great loss to Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X