பிரசாந்தின் அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. என்ன கேரக்டருன்னு பாருங்க!

சென்னை: பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் பிபரல நடிகர் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏராளமான விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

தியாகராஜன இயக்கம்

தியாகராஜன இயக்கம்

இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் அந்தகன் படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை நடிகர் பிரசாந்தின் அப்பாவான தியாகராஜன் இயக்குகிறார்.

அந்தகன் படத்தில் சமுத்திரக்கனி

அந்தகன் படத்தில் சமுத்திரக்கனி

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி அந்தகன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

அந்தகன் படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதுதொடர்பாக பேசிய தியாகராஜன், இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே அவரை ஃபாலோ செய்தேன். படங்களில் பிஸியாக உள்ளார். இருப்பினும் அந்தகன் படத்திற்காக தொடர்ச்சியாக தேதிகளை கொடுத்துள்ளார்.

10 நாட்களில் முடிந்துவிடும்

10 நாட்களில் முடிந்துவிடும்

அதற்கு காரணம் அந்த ரோல் அவருக்கு பிடித்ததுதான். அவரது கேரக்டர் படத்தில் ரொம்பவே பவர்ஃபுல்லானது. இன்று முதல் அவருடைய ஷூட்டிங் தொடங்குகிறது. பத்து நாட்களில் அவரது போர்ஷன் முடிந்துவிடும் என கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் ஷூட்டிங்

மூன்று நாட்கள் ஷூட்டிங்

இதுவரை படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், சென்னை மற்றும் புதுச்சேரியில் எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளில் மூன்று நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X