கவுண்டமணியிடமே வம்புக்கு சென்ற வடிவேலு.. காரை வைத்து இடிக்க போனாராம்.. இவ்வளவு சேட்டையா?
சென்னை: வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து இயக்குநர் வி.சேகர் பேசியிருக்கும் விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இப்படியும் வடிவேலு செய்திருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
வைகை புயல் வடிவேலு சில காரணங்களால் சினிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடிந்ததன் காரணமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் மாமன்னன் மட்டும் மெகா ஹிட்டடித்தது. தற்போது அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படங்களும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலு மீது குற்றச்சாட்டு: வடிவேலு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சூழலில் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் வைக்கப்படுகின்றன. அதாவது அவருடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளே அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால் வடிவேலு அதற்கு பெரிதாக எந்தவிதமான ரெஸ்பான்ஸையும் கொடுப்பதில்லை. அதேசமயம் ஒரு சிலரோ வடிவேலுவுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள். இந்நிலையில் வடிவேலு குறித்து இயக்குநர் வி.சேகர் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வி.சேகர் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இரண்டாவது படத்தில் நடிக்கும்போதே வடிவேலு கார் வாங்கிவிட்டார். அவர் கார் வாங்கியதுதான் சிக்கல் ஆரம்பித்ததற்கான முதற்புள்ளி. நான் பெத்த மகனே படத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணியும், செந்திலும் தங்களது கார்களை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது தன்னுடைய காரில் வந்த வடிவேலு; கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் கார்களை இடிப்பது போல வந்து அவற்றின் அருகில் நிறுத்தினார். அது அங்கிருந்தவர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செந்திலின் ரியாக்ஷன்: வடிவேலு அப்படி வந்ததை பார்த்த செந்தில் உடனடியாக கவுண்டமணியிடம் சென்று, 'நமது காரை இடிப்பது போல் வந்து வடிவேலு அவரது காரை நிறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விட்டிருந்தால் இடித்துவிடுவார் போலிருக்கிறது என்று கூறினார். அதற்கு கவுண்டமணியோ, 'வடிவேலு சரியான விவகாரம் புடிச்ச ஆளா இருக்கிறார். விட்டால் அவன் நம் மீதே காரை ஏற்றிவிடுவான். இதை நாம் இயக்குநரிடம் சொல்வோம்' என்று சொல்லிவிட்டு என்னிடம் அந்த விஷயத்தை கொண்டு வந்தார்கள். உடனே வடிவேலுவை கூப்பிட்டு நடந்தவற்றை பற்றி கூறினேன்.
வடிவேலுவின் வாதம்: ஆனால் அவரோ, வேறு எங்கு காரை நிறுத்த முடியும். இடிப்பது போல்தான் வந்தேன். இடிக்கவா செய்தேன் என்று வாதம் செய்தார். அதுமட்டுமின்றி செந்தில், கவுண்டமணிக்கு எதிராக வேண்டுமென்றே புதிய காரில் என்னை ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு செல்வான். அவர்களை கடுப்பேற்ற அப்படி செய்வான். காலம் மாறிப்போச்சு படத்தில் வடிவேலுவின் இம்சை தாங்காமல் அவனை படத்திலிருந்து தூக்குங்கள் என்று சொன்னார். இதற்கிடையே செந்திலும், கோவை சரளாவும் நெருக்கமாக இருந்தார்கள்.
அந்த சமயத்தில் வடிவேலுவுக்கு சரளா ஜோடியானது செந்திலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அவரும் என்னிடம் வந்து வடிவேலுவை படத்திலிருந்து தூக்குங்கள் என்று கூறினார். ஆனால் நான் இந்தப் படத்தில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன். அடுத்த படத்தில் கமிட் செய்ய வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் கவுண்டமணியோ அதை ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











