இயக்குநர் வி.சேகர் காலமானார்.. கை கொடுக்காத இரண்டு வார கால மருத்துவ போராட்டம்!

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான படங்களை நகைச்சுவையாக சொல்ல முடியும், அது வெற்றி பெறும் என்ற டெம்ப்ளேட்டை உருவாக்கியவர் இயக்குநர் வி. சேகர். மருத்துவமனைவில் தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குநர் வி சேகர் காலமானார். அவருக்கு வயது 72. கடந்து இரண்உ வாரங்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி மாலை காலமானார். இவரது மறைவு மொத்த தமிழ் திரையுலகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Director V Shekar Died More Than 2 Weeks Hospitalized Due To Health Issue

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களான வடிவேலு மற்றும் விவேக்கை இணைந்து நடிக்க வைத்து அவர்களுக்கு என்று ஒரு பாடலை உருவாக்கி அதை ஹிட் ஆக்கியவர் இவர்தான். இயக்குநர் வி. சேகர் சில வாரங்கலுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது மகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் காலமானது பலரையும் சோகத்தில் அழ்த்தியுள்ளது.

வி. சேகரின் மகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழ் மக்களே... என் தந்தையும் மக்கள் இயக்குனருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் பதிவிட்டு வந்தார்கள். ஆனால் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மரணமடைந்தார்.

இவர் தமிழில், மொத்தம் 17 படங்களும் கன்னடத்தில் ஒரு படமும் என மொத்தம் 18 படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களில், “ வரவு எட்டணா செலவு பத்தனா, பொண்டாட்டி சொன்னா கேட்கனும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஒன்னா இருக்க கத்துக்கனும், காலம் மாறி போச்சு, விரலுக்கு ஏத்த வீக்கம், வீட்டோட மாப்பிள்ளை போன்ற படங்கள் எப்போதும் எவர் க்ரீன் படங்களாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும். இவர் இது மட்டும் இல்லாமல் பொறந்த வீடா புகுந்த வீடா என்ற சீரியலையும், வீட்டுக்கு வீடு என்ற சீரியலையும் மெகா தொடர்களாக இயக்கி உள்ளார்.

More from Filmibeat

Read more about: v sekar tamil cinema death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X