“வாரிசு“ படம் பார்த்து கண்கலங்கிய வம்சியின் தந்தை… மிகப்பெரிய சாதனையே இதுதான் நெகிழ்ந்த வம்சி!
ஹைதராபாத் : வாரிசு படம் பார்த்த இயக்குநர் வம்சியின் தந்தை, மகனை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவானத் திரைப்படம் வாரிசு. இப்படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரிசுடு என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழில் இப்படம் ஜனவரி 11ந் தேதி புதன்கிழமை வெளியான நிலையில், தெலுங்கில் இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

விஜயின் வாரிசு
நடிகர் விஜய் முதன் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். கார்த்திக், நாகார்ஜூன் நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா,ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, பிரபு, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தின் கதை
நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டுக்குடும்ப கதையில் நடித்துள்ளார். அப்பா சரத்குமாரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஏழு ஆண்டுகளாக வீட்டிற்கு வராமல் குடும்பத்தினரை பிரிந்து இருக்கிறார் விஜய். திடீரென சரத்குமாருக்கு உடல்நிலை பாதிக்க, அம்மாவுக்காக வீட்டுக்கு வரும் விஜய், குடும்பத்தில் பணம் இருந்தும் அன்பு இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். மேலும், வில்லன் பிரகாஷ் ராஜ் பிசினசை கெடுக்க, குடும்பம், பிஸ்னஸ் என அனைத்தையும் சரி செய்கிறார்.

கொண்டாடும் ரசிகர்கள்
இந்த படத்தில் விஜய் சற்று வித்தியாசமான பாடி லாங்குவேஜ், ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் புகுந்து விளையாடி உள்ளார்.பல இடங்களில் செண்டிமென்ட் காட்சியில் விஜய் அனைவரையும் கதறி அழவைத்துள்ளார். இப்படத்தின் தமிழ் பதிப்பு கடந்த புதன் கிழமை ஜனவரி 11ந் தேதி வெளியானது. இப்படத்தை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனந்த கண்ணீர்
வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரிசுடு இன்று திரையரங்கில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் வம்சி தனது அம்மா, அப்பா, மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் திரையரங்கில் பார்த்தார். இப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன வம்சியின் தந்தை மகனை தட்டித்தழுவி அரவணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.

"நீ தான் என் ஹீரோ நான்னா"
மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த தருணத்தை வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இன்று எனது "அப்பா பார்த்து படம் பார்த்து நெகிழ்ந்து போனார்" இதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை. இது நாள் என் வாழ்நாள் முழுவதும் போற்றப்படும் தருணம்.. "நீ தான் என் ஹீரோ நான்னா"...லவ் யூ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











