ரொம்ப பயமா இருக்கு.. என்ன தளபதி 66 பட இயக்குநர் இப்படி சொல்லிட்டாரே.. எல்லாம் பீஸ்ட் பண்ண மாயமோ?

சென்னை: தளபதி 66 படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டதற்கு, "ரொம்ப பயமா இருக்கு" என அதன் இயக்குநர் வம்சி பேசியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கார்த்தியின் தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் வம்சி.

அடுத்ததாக நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தையும் இவர் இயக்கி வருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தளபதி 66 இயக்குநர்

தளபதி 66 இயக்குநர்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணி வரும் இயக்குநர் வம்சிக்கு தளபதி 66 படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். சமீபத்தில் அந்த படத்திற்கான பட பூஜை போடப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீதா கோவிந்தம், புஷ்பா, சுல்தான் படங்களின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். படத்தின் பூஜையின் போது நடிகர் விஜய்யுடன் அவர் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள், திருஷ்டி உடைத்த புகைப்படங்கள் எல்லாம் செம டிரெண்டாகின.

ரொம்ப பயமா இருக்கு

ரொம்ப பயமா இருக்கு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தை சென்னையில் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. அதில், தளபதி 66 இயக்குநர் வம்சியும் கலந்து கொண்டார். மேடை ஏறி பேசிய அவரிடம் தளபதி 66 படம் பற்றி தொகுப்பாளர்கள் கேட்க, "ரொம்ப பயமா இருக்கு" என தமிழில் அவர் சொன்னது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ரசிகர்களுக்கு உறுதி

ரசிகர்களுக்கு உறுதி

தளபதி 66 படத்தை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும், இதுவரை முதல் ஷெட்யூல் தான் முடிந்துள்ளது. அது பற்றி அதற்கு மேல் சொல்ல முடியாது. ஆனால், எப்படியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளார் இயக்குநர் வம்சி.

Recommended Video

Beast FDFS Audience OPINION | Thalapathy | Nelson | Theatre Response | Filmibeat Tamil
பீஸ்ட் தான் காரணமா

பீஸ்ட் தான் காரணமா

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான விஜய்யின் பீஸ்ட் ரிப்போர்ட் பற்றி அறிந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் அப்படியொரு வார்த்தையை இயக்குநர் வம்சி பயன்படுத்தினாரா? என்கிற கேள்விகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். பெரிய பில்டப் பண்ணாமல் தன்னடகத்தோடு வம்சி பேசியுள்ள நிலையில், அவருடைய படம் பேசும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X