“தளபதி 66“ படத்தை பற்றி பேசவே பயமா இருக்கு.. தெறித்து ஓடிய இயக்குநர் வம்சி!
சென்னை : தளபதி 66 திரைப்படத்தை பற்றி பேசவே பயமா இருப்பதாக இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'தளபதி 66' என இப்படத்திற்கு தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

தளபதி 66
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம், கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துமாறு நடிகர் விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட செட்
இதனால் சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜய்யின் இந்த முடிவால், சுமார் 100 முதல் 200 வரை பெப்சி ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், பெப்சி ஊழியர்கள் அவரை பாராட்டு வருகின்றனர். செட் அமைக்கும் பணி முடிவடைந்ததும் தளபதி 66 திரைப்படத்தின் பணி சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

பேச பயமா இருக்கு
இந்நிலையில், தளபதி 66 படத்தின் இயக்குனர் வம்சி பிரபல நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தளபதி 66 படத்தை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்போ படத்தை பற்றி பேச பயமா இருக்கு என்று சொல்லவிட்டு உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கி விட்டார் வம்சி.

பயம் வரத்தானே செய்யும்
இந்த இணையத்தில் பேசுபொருளாகி உள்ள நிலையில், ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்த்ததனால் வந்த பயமா என கேள்வி கேட்டு, வாய்க்கு வந்த படி கமெண்ட் அடித்து வருகின்றனர். பீஸ்ட்டை ரசிகர்கள் தாறுமாறாக வெச்சி செய்து வரும் நேரத்தில்...ஓவரா எதாவது பேசிவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் வரத்தானே செய்யும். அது மட்டும் இல்லாமல் பீஸ்ட் படத்தின் தோல்வியால், அடுத்த படத்தை கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என்ற பெரிய கட்டாயம் வம்சிக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











